மனிதநேயத்தை வளர்ப்பதை முதல்பணி – இனிகோ இருதயராஜ்

மனிதநேயத்தை வளர்ப்பதை முதல்பணி – இனிகோ இருதயராஜ்
திருச்சிராப்பள்ளி பாலக்கரை பருப்புக்காரத் தெருவில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு செல்வ மாரியம்மன் திருக்கோயில் புனராவர்த்தன அஷ்டப்பந்தன மஹா கும்பாபிஷேக விழாவில் இனிகோ இருதயராஜ் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

அத்திருக்கோயில் விழாக்குழுத் தலைவர் தங்க நீலகண்டன், தெய்வேந்திரன், அய்யம்மாள், தனபால், பாலா உள்ளிட்டோர் திரு.இனிகோ இருதயராஜ் அவர்களை வரவேற்றனர்.

அருள்மிகு செல்வ மாரியம்மன் கோயில் அர்ச்சகர்கள் சிவஸ்ரீ வேலாயுத பட்டர் மற்றும் ரமேஷ் குருக்கள் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து இனிகோ இருதயராஜ் அவர்களுக்கு அம்மனின் பிரசாதத்தை வழங்கி ஆசீர்வதித்தார்கள்.
அப்போது இனிகோ இருதயராஜ் குருக்களிடம் கூறும்போது “நான் அனைத்து சமய விழாக்களிலும் கலந்து கொள்வேன். மனிதநேயத்தை வளர்த்தெடுப்பதே என்னுடைய முதல் பணியாக இருக்கும்” என்றார்.
