திருச்சியில் மத்திய சிறையில் இறைச்சி விற்பனை செய்யும் சிறைவாசிகள்:

0

திருச்சியில் மத்திய சிறையில் இறைச்சி விற்பனை செய்யும் சிறைவாசிகள்:

திருச்சி மத்திய சிறையில் 1300 க்கும் மேற்பட்ட  தண்டனை கைதிகள் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களின் மறுவாழ்விற்காக நன்னடத்தை அடிப்படையில் பல்வேறு தொழில் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

சந்தா 2

இதில் வேளாண்துறை அறிவுரைப்படி விவசாயம் மற்றும் பேக்கரி பொருள்கள், உணவு தயாரிப்பு போன்ற பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த வகையில் தற்போது சிறைவாசிகள் ஆடுகள் வளர்க்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

‌சந்தா 1

இதனையடுத்து இரண்டு நன்னடத்தை கைதிகளை வைத்து சிறை வளாகத்தில் அமைந்துள்ள சிறை அங்காடி முன் இறைச்சிக் கடை தொடங்கப்பட்டுள்ளது இக்கடையானது ஞாயிறு மட்டுமே திறக்கப்படும். மேலும் வெளியில் விற்கும் விலையை விட குறைவானதாகும் தரமானதாகவும் இருப்பதாக பொதுமக்கள் தெரிவித்தனர்

Leave A Reply

Your email address will not be published.