திருச்சியில் அரசு மருத்துவமனை ஊர்தி ஓட்டுநர்கள் கலந்தாய்வு கூட்டம் 

0
gif 1

திருச்சியில் அரசு மருத்துவமனை ஊர்தி ஓட்டுநர்கள் கலந்தாய்வு கூட்டம் 

திருச்சியில் தமிழ்நாடு மருத்துவமனை ஊர்தி ஓட்டுனர் பணியாளர் சங்கத்தின் மாநில அளவிலான கலந்தாய்வு கூட்டம் பெரிய மிளகுபாறையில் நேற்று (1.03.2021) நடைபெற்றது.

gif 4

இந்த கலந்தாய்வு கூட்டத்தில் அமரர் ஊர்தி, தாய்சேய் நல ஊர்தி ஓட்டுனர்களுக்கு அரசு மருத்துவமனை ஓட்டுநர்களுக்கும் இணையான ஊதியம் வழங்க வேண்டும், பணிநிலையாணைகளையும் வழங்க வேண்டும், வார விடுமுறை வழங்க வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

gif 3

இதுகுறித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர் மற்றும்  சுகாதாரத்துறை இயக்குனர் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது. இதில் சங்கத்தின் மாநில தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலர் ருத்ரா கோடீஸ்வரன் திருச்சி மாவட்ட ஏஐடியூசி பொது செயலாளர் சுரேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரையாற்றினார்.

gif 2

Leave A Reply

Your email address will not be published.