திருச்சி அருகே உண்டியல் பணத்துடன் வெங்காய மூட்டை கொள்ளை:

திருச்சி அருகே உண்டியல் பணத்துடன் வெங்காய மூட்டை கொள்ளை:

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே செல்லிபாளையம் கிராமத்தி்ல் உள்ள மாரியம்மன் கோவில், மற்றும் விநாயகர் கோவிலின் உண்டியலை உடைந்து மர்மநபர்கள் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். மேலும், அப்பகுதியில் விவசாயிகள் விற்பனைக்காக வைத்திருந்த வெங்காய மூட்டைகளையும் திருடி சென்றுள்ளனர்.
இதுகுறித்து, தகவலறிந்து வந்த போலீசார்,செல்லிபாளையம் ஊராட்சி தலைவர், அரவிந்தன் கொடுத்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்து கொள்ளையில் ஈடுப்பட்ட மர்மநபர்களை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
