திருச்சியில் அன்பில், உத்தமர்கோவில் பெருமாள்கள் தீர்த்தவாரி:

0
1

திருச்சியில் அன்பில், உத்தமர்கோவில் பெருமாள்கள் தீர்த்தவாரி:

ஸ்ரீரங்கம் கொள்ளிடம் ஆற்றில் அன்பில் சுந்தரராஜ பெருமாள் மற்றும் உத்தமர்கோவில் புருஷோத்தம பெருமாள் நேற்று (27/02/2021) தீர்த்தவாரி கண்டு அருளினார்.

2
4

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் உபகோவிலான அன்பில் சுந்தரராஜ பெருமாள் கோவில் மாசிமக திருவிழாவையொட்டி நேற்று முன்தினம் இரவு சுந்தரராஜ பெருமாள் புறப்பட்டு உத்தமர்கோவில் மண்டபத்தை வந்தடைந்தார்.  பின்னர் சனிக்கிழமை காலை 9 மணிக்கு கொள்ளிடம் ஆற்றுக்கு வந்தடைந்தார். அங்கிருந்து அலங்கார பந்தலில் எழுந்தருளி தீர்த்தவாரி கண்டு அருளினார்.

பின்னர் சிறப்பு திருவாராதனங்கள் நடைபெற்றது இதனை அடுத்து இரவு 9 மணிக்கு பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பின்னர் இரவு 9.15 மணிக்கு புறப்பட்டு இன்று 28/02/2021 காலை அன்பில் சென்றடைந்தார். இதேபோல் மாசி மகத்தை ஒட்டி உத்தமர் கோயில் உற்சவர் புருஷத்தம பெருமாள் நேற்று  காலை கொள்ளிடம் ஆற்றில் தீர்த்தவாரி கண்டருளினார் .பின்பு சனிக்கிழமை இரவு அங்கிருந்து புறப்பட்டு உத்தமர் கோயில் சென்று சேர்ந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

3

Leave A Reply

Your email address will not be published.