திருச்சியில் பெண்ணின் வயிற்றில் இருந்த 18 கிலோ கட்டி அகற்றம்:  ப்ரண்ட்லைன் மருத்துவர்கள் சாதனை:

0
gif 1

திருச்சியில் பெண்ணின் வயிற்றில் இருந்த 18 கிலோ கட்டி அகற்றம்:  ப்ரண்ட்லைன் மருத்துவர்கள் சாதனை

திருச்சி பிரண்ட்லைன் மருத்துவமனையில் பெண்ணின் வயிற்றில் இருந்த 18 கிலோ கட்டி நேற்று (27.02.2021) அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.

gif 4

இதுகுறித்து திருச்சி ட்ரெயின் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது: திருச்சியை சேர்ந்த 40 வயது பெண் கடந்த நான்கு ஆண்டுகளாக வயிற்றில் கட்டியுடன் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் மருத்துவ பரிசோதனையில் அந்த பெண்ணுக்கு கர்ப்பப்பைக்கு அருகில் பெரிய கட்டி இருப்பது தெரிய வந்தது.

gif 3

இதனையடுத்து, நேற்று (27.02.2021)அறுவை சிகிச்சையின் மூலம் கட்டியானது அகற்றப்பட்டது. திருச்சி ப்ரண்ட்லைன் மருத்துவமனையில் இதுபோன்ற கட்டி அகற்றும் அறுவை சிகிச்சைகள் அடிக்கடி மேற்கொள்ளப்படும். ஆனால், அதிக எடை கொண்ட கட்டி தற்போதுதான்  அகற்றப்பட்டுள்ளது. பெண்கள் கர்ப்பப்பை கட்டி, புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பெற்று பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் எனக் கூறினார்.

gif 2

Leave A Reply

Your email address will not be published.