தாங்க முடியாத முழங்கால் வலியா? எலுமிச்சை இருக்கே 

0
1

தாங்க முடியாத முழங்கால் வலியா? எலுமிச்சை இருக்கே 

எலும்புகள் தொடர்ச்சியாக தேய்மானம் அடையும் காரணமாக முழங்கால் மூட்டு வலி ஏற்படுகிறது. இப்பிரச்சனை வயதானவர்களுக்கு மட்டுமில்லாமல் இளம் வயதினரையும் தாக்குகிறது.

இயற்கை வழியில் இப்பிரச்சனைகளுக்கு தீர்வு காண எலுமிச்சை மற்றும் நல்லெண்ணெய் உதவுகிறது.

*தேவையான பொருட்கள் :*

• எலுமிச்சை – 2

• நல்லெண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

2

*பயன்படுத்தும் முறை :*

எலுமிச்சையை துண்டுகளாக்கி, காட்டன் துணியில் வைத்து கட்டி, அதை வெதுவெதுப்பான நல்லெண்ணெயில் நனைத்து, வலியுள்ள இடத்தில் 5-10 நிமிடம் ஒத்தடம் கொடுக்க வேண்டும்.
இம்முறையை தினமும் இரண்டு வேளைகள் செய்து வந்தால், முழங்கால் மற்றும் மூட்டுவலி விரைவில் குணமாகும்.

நன்மைகள் :

• எலுமிச்சை பழத்தில் உள்ள கால்சியம் மற்றும் விட்டமின்கள் எலும்பு சம்பந்தப்பட்ட நோய்களில் இருந்து தடுத்து, எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

• நல்லெண்ணெயில் நோயெதிர்ப்பு அழற்சி பொருள் உள்ளது. இது எலும்பு மஜ்ஜை திசுக்கள் வழியாக ரத்த நாளங்களில் ஊடுருவி, ரத்த ஒட்டத்தில் நுழைந்து, எலும்பு தொடர்பான நோய்கள் வராமல் தடுக்கிறது.

குறிப்பு :

உடல் எடையை தாங்க முடியாத அளவு வலி இருந்தால், கால்களை மடக்க, நீட்ட முடியாமல் இருந்தால், முழங்கால், மூட்டு வலியுடன் காய்ச்சல் போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

3

Leave A Reply

Your email address will not be published.