பழங்குடியினர் நலத்துறையில் பள்ளி விடுதியில் சேர விண்ணப்பிக்கலாம்:

0
gif 1

பழங்குடியினர் நலத்துறையில் பள்ளி விடுதியில் சேர விண்ணப்பிக்கலாம்:

gif 4

 திருச்சி மாவட்டத்தில் செயல்படும் பழங்குடியினர் நலத்துறை பள்ளி விடுதிகளில் 4 ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை பயிலும் மாணவ , மாணவிகளும் சேர தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம், கொரோனா தொற்று காரணமாக துவக்கப்பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் அரசு , அரசு உதவி பெறும் பள்ளிகளில் 9 ம் வகுப்பு முதல் மேல்நிலை இரண்டாம் ஆண்டு வரை பயிலும் மாணவ , மாணவியர் சேர தகுதியுடையவர்கள் ஆவார்கள் .

இந்த மாணவ , மாணவியருக்கு உணவும் , உறைவிடமும் இலவசமாக அளிக்கப்படும் . இந்த விடுதிகளில் சேர பெற்றோரின் ஆண்டு வரு மானம் ரூ .2,50,000 க்கு மிகாமல் இருக்க வேண்டும் . விடுதிக்கும் மாணவரின் இருப்பிடத்திற்கும் 5 கி.மீ தூரம் குறையாமல் இருக்க வேண்டும் . ஆனால் தூர அளவு மாணவியர்களுக்குப் பொருந்தாது .தகுதியுடைய மாணவ , மாணவியர்கள் விண்ணப் பங்களை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர்களிடமிருந்து இலவசமாக பெற்றுக் கொள்ளலாம் . பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மார்ச் 12 ம் தேதிக்குள் விடுதிக் காப்பாளரிடம் சமர்பிக்க வேண்டும் . காலக்கெடுவுக்குள் வரப்பெறாத விண் ணப்பங்கள் பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்ளப்படமாட் டாது என தெரிவிக்கப்படுகிறது .

gif 2

Leave A Reply

Your email address will not be published.