ஆதரவற்ற பெண் மூதாட்டியை நல்லடக்கம் செய்த பெண் வழக்கறிஞர்

0
D1

ஆதரவற்ற பெண் மூதாட்டியை நல்லடக்கம் செய்த பெண் வழக்கறிஞர்

நெஞ்சை உருக்கும் சம்பவம்

சாலையோரம் இறந்து கிடந்த ஆதரவற்ற மூதாட்டியை நல்லடக்கம் செய்த அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளையினர்

D2

திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் அறியப்படாத பலர் ஆதரவற்று கிடைத்த உணவை உண்டு சாலையோரம் வாழ்ந்து வருகிறார்கள். பலர் வயோதிக காலத்தில் வீட்டிலிருந்து வீதிக்கு வந்து விடுகிறார்கள். முதுமைக்கே உரிய தள்ளாமை, சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், பார்வை மற்றும் செவித்திறன் குறைபாடு உள்ள இவர்கள் ஆதரவற்றோராக சாலைகளில் சுற்றித் திரிகின்றனர். நிற்க முடியாமல், உட்கார முடியாமல் மழை, வெயில், குளிர் என பல்வேறு சீதோசன நிலைகளிலும்
சாலையோரங்களில் படுத்துக் கிடக்கின்றனர்.

இவர்களுக்கு ஏற்படும் வலியும் வேதனையும் கொடுமையானது. இவ்வாறு அவதிப்படும் முதியவர்களை கண்டும் காணாமலும் கடந்து செல்கிறோம். இவ்வாறு பிறரிடம் யாசகம் கேட்டு சுற்றித்திரிந்த பெயர், விலாசம் அறியப்படாத நபர் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி தில்லை நகர் காவல்நிலைய சரக எல்லைக்குட்பட்ட தென்னூர் மின்சார வாரியம் அலுவலகம் பின்புறம் 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி 8-1-2021 நன்பகல் 12 மணிக்கு மயங்கிகிடந்துள்ளார்.

N2

பொது மக்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் 8-1-2021 அன்று திருச்சி புத்தூர் மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் பகல் 12-20 மணிக்கு உள்நோயாளியாக சேர்க்கப்பட்டு தொடர் சிகிச்சையில் இருந்து வந்தார். அவர் பெயர் பாப்பாத்தி என்றார்.அவரது விலாசம் தெரியவில்லை . மூதாட்டி சிகிச்சை பலனின்றி 22-2-2021ஆம் தேதி பகல் 2-05 மணிக்கு இறந்துவிட்டார்.

அவரது பிரேதம் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டிருந்தது. இறந்த மூதாட்டி குறித்து விசாரிக்கையில், தென்னூர் பகுதியில் பிச்சை எடுத்து ஜீவனம் நடத்தி வந்தார் என்றும் அவரை ஆதரிக்க யாரும் இல்லாத நிலையில் உடல் நலம் குன்றி இறந்து விட்டார் என்பதும் தெரியவந்தது. மேற்படி நபர் குறித்து தில்லை நகர் காவல் நிலையத்தில் அவரது புகைப்படத்துடன் கூடிய தகவல்களை தினசரி நாளிதழ்களில் பிரசுரம் செய்து அவரைப் பற்றிய விவரங்களை அறிய அனைத்து முயற்சிகளை மேற்கொண்டும் அவரது விலாசம் அறிய முடியவில்லை என்பது காவல்துறை மூலம் தெரியவந்துள்ளது.

மேற்படி மூதாட்டி பாப்பாத்தியை ஆதரிக்க யாரும் இல்லாத நிலையில் அனாதையாக பிச்சை எடுத்து பிழைப்பு நடத்தி வந்தவர் என்றும் நாளுக்கு நாள் உடல் நலம் குன்றி நடை உடை இல்லாமல் படுத்திருந்தவர் என்றும் அவரது பிரேதத்தை உடற்கூறு ஆய்வுக்கு உட்படுத்தாமல் நல்லடக்கம் செய்ய இருக்கை மருத்துவ அதிகாரிக்கு காவல்துறையினர் கடிதம் எழுதியிருந்தனர்.

மேற்படி பிரேதத்தை நல்லடக்கம் செய்ய திருச்சிராப்பள்ளி தில்லை நகர் காவல்நிலைய முதல்நிலைக் காவலர் சோலைராஜ் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் விஜயகுமாருக்கு 26-2-2021 அன்று தகவல் அளித்ததன் அடிப்படையில் மகாத்மா காந்தி நினைவு பொது மருத்துவமனை பிரேத கிடங்கில் இருந்து முதல் நிலை காவலர் சோலை ராஜ் உடன் வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார் , யோகாசிரியர் விஜயகுமார் உள்ளிட்டோர் பிரேதத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்து திருச்சிராப்பள்ளி தென்னூர் அண்ணா நகர் மயானத்தில் 26-2-2020 அன்று மதியம் நல்லடக்கம் செய்யப்பட்டது.

நல்லடக்கம் செய்யப்பட்ட புகைப்படம் ஒளி ஒலிப் பதிவுகளை ஆவணமாக பொது அறிவிப்பாக வெளியிடப்படுகிறது.

N3

Leave A Reply

Your email address will not be published.