திருச்சி அருகே கார் கவிழ்ந்து விபத்து ஒருவர் பலி

0
D1

திருச்சி அருகே கார் கவிழ்ந்து விபத்து ஒருவர் பலி

திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர் பால்ராஜ் (55). அப்பகுதியில் உள்ள மின்வாரியத்தில் வயர்மேன் ஆக பணியாற்றி வந்தார். இவரது மகள் ஐயப்பனுக்கு மின்வாரியத்தில் கேங்மேன் பணி சமீபத்தில் கிடைத்தது. அதற்கான பணி நியமன ஆணையை நேற்று சென்னையில் வந்து பெற்றுக் கொள்வதற்காக தமிழ்நாடு மின்சார வாரியத்தில் இருந்து தபால்  அனுப்பப்பட்டிருந்தது.

N2

இதற்காக நேற்று சென்னைக்கு   உறவினர்களுடன் காரில் புறப்பட்டனர்.  இந்நிலையில் திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அளுந்தூர் அருகே சென்று கொண்டிருந்தபோது கார் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.  இதில் பால்ராஜ் உள்ளிட்ட மூவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

D2

பொதுமக்கள் இவர்களை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் . ஆனால் அங்கு பால்ராஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

N3

Leave A Reply

Your email address will not be published.