திருச்சியில் குறைந்த அளவிலேயே அரசு பேருந்துகள் இயக்கம்: பயணிகள் அவதி:

0
D1

திருச்சியில் குறைந்த அளவிலேயே அரசு பேருந்துகள் இயக்கம்: பயணிகள் அவதி:

N2

அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுக்கு 14வது ஊதிய ஒப்பந்தத்தை உடனே நிறைவேற்ற வேண்டும், நிலுவைத் தொகையை  உடனே வழங்க வேண்டும், ஓய்வூதியர்களுக்கு பணப்பலனை தாமதமின்றி வழங்க வேண்டும் உள்ளி்ட்ட  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் நேற்று (25.02.2021) முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் ஏராளமான பயணிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை அரசு பேருந்துகள் மிகவும் குறைவான எண்ணிக்கையிலேயே  இயக்கப்பட்டது.  இதனால் கல்லூரிக்கு செல்பவர்கள் அலுவலகத்திற்கு செல்பவர்கள் மிகவும் சிரமம் அடைந்தனர். மேலும் போதிய பஸ் வசதி இல்லாத காரணத்தினால் தனியார் பேருந்தில் அதிக நெரிசலுடன், படியில் தொங்கியபடி ஆபத்தான பயணத்தை மேற்கொண்டனர்.

N3

Leave A Reply

Your email address will not be published.