திருச்சி திருவெறும்பூரில் பட்டப்பகலில் 32 பவுன் நகை கொள்ளை

0
D1

திருச்சி திருவெறும்பூரில் பட்டப்பகலில் 32 பவுன் நகை கொள்ளை

திருச்சி திருவரம்பூர் அருகே குண்டூர் ஐயம்பட்டி பகுதியை சேர்ந்தவர் துளசிராம் 65.  ஓய்வு பெற்ற எஸ்ஐயான இவர் திருச்சியில் செக்யூரிட்டியாக ஆக பணியாற்றி வருகிறார்.  இவருடைய மனைவி ரமணி ஏர்போர்ட் காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிகிறார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். நேற்று 25/2/2021 தம்பதியர் இருவரும் பணிக்கு சென்றிருந்தனர். குழந்தைகளும் பள்ளிக்கு சென்று இருந்தனர்.  இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சூழ்நிலையை பயன்படுத்தி உள்ளே புகுந்த மர்மநபர்கள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த 32 பவுன் தங்க நகையை கொள்ளையடித்து சென்றனர்.

N2

மாலை வேலை முடிந்து வந்த துளசிராம் வீட்டின் பின்கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தபோது நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டது தெரிந்தது.

D2

இது குறித்து அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

N3

Leave A Reply

Your email address will not be published.