டெல்லி குடியரசு தினவிழாவில் திருச்சி மாணவிக்கு மத்திய அமைச்சர் பாராட்டு பத்திரம் வழங்கி கௌரவிப்பு

0
D1

டெல்லி குடியரசு தினவிழாவில் திருச்சி மாணவிக்கு மத்திய அமைச்சர் பாராட்டு பத்திரம் வழங்கி கௌரவிப்பு

திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு காலனியில் வசிக்கும் ஆராய்ச்சி படிப்பு மாணவிக்கு டெல்லியில் நடந்த குடியரசு தின விழாவில் மத்திய அமைச்சர் பாராட்டு பத்திரம் வழங்கி கௌரவித்து உள்ளார்.

D2
N2

திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு பர்மா காலனி பகுதியில்,  21வது தெருவில் வசித்து வருபவர் துரைராஜ். இவரது மகள் மோனிகா வயது 24  இவர் எம் எஸ் சி மைக்ரோபயாலஜி பல்கலைக்கழகத் தேர்வில் அகில இந்திய அளவில் முதல் இடத்தை பிடித்தவர்.

தற்பொழுது காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் பிஎச்டி ஆராய்ச்சிப் படிப்பு படித்து வருகிறார். அண்மையில் நாடு முழுவதும் சிறந்த பல்கலைக் கழகங்களில் இருந்து சிறந்த 50 மாணவர்களை மத்திய அரசு தேர்வு செய்தது. இதில் தமிழகத்தில் மோனிகா உள்பட மூன்று பேர் தேர்வு செய்யப்பட்டனர். இதனையடுத்து டெல்லியில் நடந்த குடியரசு தின விழாவில் பிரதமரின் விருந்தினராக மோனிகா வரவழைக்கப்பட்டு அங்கு நடந்த விழாவில் மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் மாணவி மோனிகாவுக்கு பாராட்டு பத்திரம் வழங்கி கௌரவித்தார்.

இதனையடுத்து மாணவி மோனிகாவிற்கு பேராசிரியர்கள் சக மாணவர்கள் கிராம மக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

N3

Leave A Reply

Your email address will not be published.