திருச்சியில் (28/02/2021) மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் :

0
D1

 திருச்சியில் 28/02/2021 மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் :

திருச்சி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழி காட்டு மையம், ஜமால் முகமது கல்லூரியுடன் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 28/02/2021 (ஞாயிறு) திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் நடைபெறவுள்ளது .

N2

இந்த முகாமில் 100 க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்கிறது. இவ்வேலைவாய்ப்பு முகாமில் 8 ம் வகுப்பு , 10 ம் வகுப்பு தேர்ச்சி , தோல்வி, பன்னிரெண்டாம் வகுப்பு , டிப்ளமோ , நர்சிங் , பாராமெடிக்கல் , ஹோட்டல் மேனேஜ்மென்ட் , பிஎட் , பட் டதாரிகள் , பிஇ வரை படித்த வேலைநாடுனர்கள் தங்களது முழு சுய விவரக்குறிப்பு நகல்கள் அனைத்து கல்விச்சான்றுகள் , ஆதார் அட்டை மற்றும் பாஸ்போர்ட் அளவுள்ள புகைப்படம் ஆகியவற்றுடன் வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளலாம் .

D2

மேலும் , தமிழ் நாடு அரசு தனியார் துறை வேலை இணையம்  (www.tnprivatejobs.tn.gov.in ) என்ற இணையதளத்தில் தங்களது கல்வித்தகுதியை பதிவு செய்து கொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் சிவராசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளார்.

N3

Leave A Reply

Your email address will not be published.