போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் காவல் துறையினரின் உபசரிப்பில் நெகிழ்ச்சி

0

போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் காவல் துறையினரின் உபசரிப்பில் நெகிழ்ச்சி

திருவெறும்பூரில் சாலை மறியல் செய்து கைதான மாற்றுத் திறனாளிகள் நேற்று இரவு விடுவிக்கப்பட்டனர்.

திருவெறும்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் வசித்து வரும் பல்வேறு வகையில் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் அரசு வழங்கி வரும் மாதாந்திர உதவித் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு குடியமர்ந்து இரண்டு நாட்களாக போராடி வந்தனர்.நேற்று திடீரென்று திருச்சி தஞ்சை சாலையில் திருச்சி புறநகர் தலைவர் குமார் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

‌சந்தா 1
சந்தா 2

இதனையடுத்து அங்கு பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த திருவெறும்பூர் ரூரல் டிஎஸ்பி சுரேஷ்குமார் உத்தரவின்படி இன்ஸ்பெக்டர்கள் ஞானவேலன் பிச்சையா அமுதா ராணி ஆகியோர் மாற்றுத்திறனாளிகள் குழந்தைகள் உள்பட 102 பேரை கைது செய்தனர்.பின்னர் மாற்றுத் திறனாளிகள் திருவெறும்பூர் அருகே உள்ள வேங்கூரில் தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

மதியம் காவல்துறையினர் மாற்றுத்திறனாளிகளுக்கு சுடச்சுட குஸ்கா சாப்பாடு குருமா அவித்த முட்டை தயிர் பச்சடியுடன் காவல் துறையினரே நின்று பரிமாறினர். மாலைப் பொழுதில் அவர்களுக்கு டீ வடை கொடுத்து அசத்தினர்.இரவு 7 மணி அளவில் அவர்களை விடுதலை செய்ததுடன் அவர்களை கைது செய்து ஏற்றி வந்த வாகனத்திலேயே மீண்டும் ஏற்றிவந்து திருவெறும்பூர் பஸ்ஸ்டாண்டில் எங்கு கைது செய்தார்களோ அங்கேயே வந்து இறக்கி விட்டனர்.

மேலும் காவல்துறையினரின் ஒரு பஸ் திருச்சி வரை செல்ல உள்ளது திருச்சிக்கு செல்பவர்கள் வருவதாக இருந்தால் வரலாம் என்றும் அழைப்பு விடுத்தனர்.திருவெறும்பூர் காவல்துறையினரின் இத்தகைய மனிதநேய செயலை கண்டு மாற்றுத்திறனாளிகள் நெகிழ்ச்சி அடைந்ததோடு கோரிக்கைக்கு அரசு செவி சாய்க்காமல் போய்விட்டாலும் காவல்துறையினர் நடத்திய விதம் எங்களுக்கு சற்று ஆறுதலாக உள்ளது என்று பெருமையுடன் கூறினர்.

திருவெறும்பூர் காவல்துறையின் இத்தகைய உபசரிப்பும் மனிதாபிமானமும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருவதை கண்டு திருவெறும்பூர் பகுதி மக்களும் சமூக ஆர்வலர்களும் காவல் துறையினருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.