திருச்சியில் சாலையோரம் இறந்து கிடந்த ஆதரவற்ற முதியவர் நல்லடக்கம்

0
D1

சாலையோரம் இறந்து கிடந்த ஆதரவற்ற முதியவரை நல்லடக்கம் செய்த  அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளையினர்

திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் அறியப்படாத  பலர் ஆதரவற்று கிடைத்த உணவை உண்டு சாலையோரம் வாழ்ந்து வருகிறார்கள்.பலர் வயோதிக காலத்தில் வீட்டிலிருந்து வீதிக்கு வந்து விடுகிறார்கள். முதுமைக்கே உரிய தள்ளாமை, சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், பார்வை மற்றும் செவித்திறன் குறைபாடு உள்ள இவர்கள் ஆதரவற்றோராக சாலைகளில் சுற்றித் திரிகின்றனர்.

N2

நிற்க முடியாமல், உட்கார முடியாமல்  மழை, வெயில், குளிர் என பல்வேறு சீதோசன நிலைகளிலும் சாலையோரங்களில் படுத்துக் கிடக்கின்றனர்.   இவர்களுக்கு ஏற்படும் வலியும் வேதனையும் கொடுமையானது. இவ்வாறு அவதிப்படும் முதியவர்களை  கண்டும் காணாமலும் கடந்து செல்கிறோம். இவ்வாறு பிறரிடம் யாசகம் கேட்டு சுற்றித்திரிந்த பெயர், விலாசம் அறியப்படாத நபர் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி கோ-அபிஷேகபுரம் கோட்டம் மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை அருகில் தாய் தனம் மகன் சுந்தர் இருவரும் பிறரிடம் யாசகம் கேட்டு ஜீவனம் நடத்தி வந்தனர்.

D2

இந்நிலையில் சுந்தர்  சுமார் ‌ஐம்பது வயது மதிக்கத்தக்கவர் இறந்து உள்ளார். இறந்த நபர் உடலுக்கு யாரும் உரிமை கோராத நிலையில் இறந்த நபரின் தகவலை அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் இருந்து  அமிர்தம் சமூகசேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமாருக்கு 24-2-2021   புதன் கிழமை காலை தகவல்  அளிக்கின்றனர். தகவலின் அடிப்படையில் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் பார்க்கையில் அரசு மருத்துவமனை அருகில் விலாசம் தெரியாத 50 வயது மதிக்கத்தக்கவர் இறந்துள்ளார்.

கருப்பு நிறம். சுமார் ஐந்து அடி உயரம் இருப்பார்.  மீட்டு எடுக்கும் பொழுது அந்த நபரிடம் எவ்வித விலை உயர்ந்த பொருட்களோ, ஆபரணங்களோ கிடையாது. அரசு மருத்துவமனை தலைமை காவலர் சீனிவாசன்   தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுனர் செல்வா உள்ளிட்டோருடன் பிரேதத்தை மீட்டு திருச்சிராப்பள்ளி அண்ணாநகர் மயானத்தில் 24-2-2021  காலை நல்லடக்கம் செய்யப்பட்டது.

N3

Leave A Reply

Your email address will not be published.