திருச்சியில் மூன்றாவது நாளாக தொடரும் அங்கன்வாடி ஊழியர்கள்  போராட்டம்:

0
gif 1

திருச்சியில் மூன்றாவது நாளாக தொடரும் அங்கன்வாடி ஊழியர்கள்  போராட்டம்:

திருச்சி பழைய கலெக்டர் அலுவல சாலையில் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் கடந்த 22ஆம் தேதி முதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

gif 4

அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியராக வேண்டும், ஊதிய உயர்வு வழங்க வேண்டும், ஓய்வு பெறும் போது பணி கொடையாக தலா ரூபாய் 10 லட்சம் மற்றும் 5 லட்சம் வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் தொடர்ந்து மூன்றாவது நாளாக காத்திருப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

gif 3

இதில் ஏராளமான அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் பங்கேற்றனர். இப்போராட்டத்தில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் சத்தியவாணி தலைமை வகித்தார் இதில் மாநில செயலாளர் பெரியசாமி மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

gif 2

Leave A Reply

Your email address will not be published.