திருச்சியில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த நபர் கைது:

0
D1

திருச்சியில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த நபர் கைது:

N2

திருச்சி கிராப்பட்டி, முஸ்லிம் தெருவை சேர்ந்தவர் அஜுஸ்கான், இவர் கடந்த 23/01/2021 அன்று இரவு செந்தண்ணீர்புரம் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த போது மர்ம நபர் கத்தியை காட்டி மிரட்டி சட்டைப்பையில் வைத்திருந்த 500 ரூபாய் பணத்தை பறித்துச் சென்றதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அஜீஸ்கான் அளித்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், அதே பகுதியை சேர்ந்த விஜய் என்பவர் கத்தியை காட்டி பணத்தை பறித்து சென்றது தெரியவந்தது. மேலும், விஜய் மீது ஏற்கனவே 3 வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரிய வந்தது. போலீசார் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விஜய்யை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

N3

Leave A Reply

Your email address will not be published.