அடிப்படை தேவைகளுக்காக குண்டூர் ஊராட்சி மன்ற தலைவர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் போராட்டம் !

குண்டூர்பகுதியில் அடிப்படை வசதிகளைநிறைவேற்றி தரக்கூறி கடந்த 2019 ம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கி இன்றுவரை பல்வேறு மனுக்கள் ஊராட்சி மன்ற தலைவரிடம் அழைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குண்டூர்ஊராட்சி நிர்வாகம் நிறைவேற்ற வேண்டிய மக்கள் நலத்திட்டங்களை குறித்த மனுவை ஊராட்சி மன்றத் தலைவரிடம் நேரில் வழங்கியும்,கடந்த ஓராண்டு காலத்தில் எதையும் செய்யாமல் ஊராட்சி மன்ற நிர்வாகம் செயலற்ற நிலையிலேயே உள்ளது என்றும்.
எனவே குண்டூர் வடக்கு மற்றும் கிழக்கு கிராம குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி , குண்டூர் ஊராட்சி மன்ற அலுவலகமாக செயல்படும் கிராம சேவை மையக் கட்டிடத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் குண்டூர் குடியிருப்போர் நலச் சங்க தலைவர் ராமமூர்த்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் மதிமுக,விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்தவர்களும் மற்றும் குண்டூர் பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர். மேலும் நிகழ்ச்சியின் இறுதியில் செயலாளர் நெடுஞ்செழியன் நன்றியுரை கூறினார்
