திருச்சியில் மாணவ, மாணவிகளுக்கான இலவச 2GB டேட்டா கார்டு வழங்கும் நிகழ்ச்சி: 

0

திருச்சியில் மாணவ, மாணவிகளுக்கான இலவச 2GB டேட்டா கார்டு வழங்கும் நிகழ்ச்சி: 

திருச்சி மாவட்டத்தில் கல்லூரி மாணவ மாணவிகளுக்கான இலவச 2ஜிபி  இணைய வசதி  டேட்டா கார்டு வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று (22/02/2021) நடைபெற்றது.  இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் சு. சிவராசு தலைமை வகித்தார் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் என்.வெல்லமண்டி நடராஜன்  இலவச  டேட்டா கார்டை  மாணவ, மாணவிகளுக்கு வழங்கினார்.

food

மேலும், அமைச்சர் கூறியதாவது, உயர் கல்வி பயிலும், மாணவ,மாணவிகளுக்கு ஊக்கமளிக்கும் வகையிலும், ஆன்லைன் வகுப்புகள் மூலம் அறிவுத்திறனை மேம்படுத்தும் வகையிலும் இலவச இணைய அட்டை  அரசு வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தின் மூலம் திருச்சி மாவட்டத்தில் உள்ள 1 அரசு பொறியியல் கல்லூரி,1 பல்கலைக் கழக உறுப்புக்கல்லூரி, 2 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள், 2 அரசு உதவி பெறும் பாலிடெக்னிக் கல்லூரிகள் உட்பட மொத்தம் 67 பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளைச் சேர்ந்த 18,281 தொழில்நுட்பக் கல்வி நிறுவன மாணவ, மாணவிகள் பயன்பெற உள்ளனர்.

மேலும், 5 அரசு கலை மற்றும் அறிவியில் கல்லூரிகள், 8 அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரி உட்பட 28 கலை அறிவியில் கல்லூரிகளைச் சேர்ந்த 32,512 மாணவ, மாணவிகள் பயன்பெற உள்ளனர். இதற்காக 50 ஆயிரத்து 793 டேட்டா கார்டுகள் தயார் நிலையில் உள்ளனர் என்றார்.  இந்நிகழ்ச்சியில், அரசு பொறியியல் கல்லூரி முதல்வர் சாந்தி, அரசு தொழிற்நுட்ப கல்லூரி முதல்வர் தேன்மொழி ஆகியோர் பங்கேற்றனர்.

gif 4

Leave A Reply

Your email address will not be published.