திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் தெப்பத்திருவிழா

திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் தெப்பத்திருவிழா
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் நேற்று (22.02.2021) இரவு தெப்பத் திருவிழா நடைபெற்றது. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் மாசித் தெப்பத் திருவிழா கடந்த 15ஆம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. உற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப திருவிழா நேற்று நடைபெற்றது. இதில் நம்பெருமாள் உபய நாச்சியார்களுடன் தெப்ப உற்சவம் கண்டருளினார்.

நேற்று மாலை 3 மணி அளவில் உற்சவர் நம்பெருமாள் உபய நாச்சியார்கள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு மாலை பிறகு மேலவாசல் பகுதியில் உள்ள தெப்பக்குளத்தின் வடகரையில் உள்ள ஆஸ்தான மண்டபம் வந்தடைந்தார். இரவு 7 மணியளவில் ஆஸ்தான மண்டபத்தில் இருந்து புறப்பட்டு இரவு 7.30 மணி முதல் இரவு 9 மணி வரை தெப்ப உற்சவம் கண்ணினார். இரவு 9 மணிக்கு தெப்பக்குளத்தின மைய மண்டபம் சென்றடைந்தார். பின்பு இரவு 11 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.

(23.02.2021) இன்று தெப்பத் திருவிழா நிறைவடைகிறது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தெப்பத் திருவிழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் வேணு சீனிவாசன், அறங்காவலர்கள் மற்றும் ஊழியர்கள் ஆகியோர் செய்து வருகின்றனர்
