திருச்சியில் விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியர்கள்  

0
1

திருச்சியில் விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியர்கள்  

திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் நேற்று (22/02/2021)  விடிய விடிய காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

4

அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியராக வேண்டும், ஊதிய உயர்வு வழங்க வேண்டும், ஓய்வு பெறும் போது பணி கொடையாக தலா ரூபாய் 10 லட்சம் மற்றும் 5 லட்சம் வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் திருச்சி பழைய கலெக்டர் அலுவலகம் சாலையில் நேற்று (22.02.2021) காத்திருப்பு போராட்டம் நடத்தப்பட்டது.

2

இதில் சுமார் 600க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் பங்கேற்றனர். கோரிக்கைகளுக்கு தீர்வு காணாவிட்டால் போராட்டம் தொடரும் என்றும் அறிவித்தனர். இப்போராட்டத்தில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தின் தலைவர் தமிழ்செல்வி தலைமை வகித்தார்.

3

Leave A Reply

Your email address will not be published.