அனாதை பிரேதத்தை நல்லடக்கம் செய்த அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளையினர்

0
1 full

 

திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் அறியப்படாத  பலர் ஆதரவற்று கிடைத்த உணவை உண்டு சாலையோரம் வாழ்ந்து வருகிறார்கள். பலர் வயோதிக காலத்தில் வீட்டிலிருந்து வீதிக்கு வந்து விடுகிறார்கள். முதுமைக்கே உரிய தள்ளாமை, சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், பார்வை மற்றும் செவித்திறன் குறைபாடு உள்ள இவர்கள் ஆதரவற்றோராக சாலைகளில் சுற்றித் திரிகின்றனர். நிற்க முடியாமல், உட்கார முடியாமல்  மழை, வெயில், குளிர் என பல்வேறு சீதோசன நிலைகளிலும் சாலையோரங்களில் படுத்துக் கிடக்கின்றனர்.

இவர்களுக்கு ஏற்படும் வலியும் வேதனையும் கொடுமையானது. இவ்வாறு அவதிப்படும் முதியவர்களை  கண்டும், காணாமலும் கடந்து செல்கிறோம். இவ்வாறு பிறரிடம் யாசகம் கேட்டு சுற்றித்திரிந்த பெயர், விலாசம் அறியப்படாத நபர் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி கேகே நகர் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட டிவிஎஸ் டோல்கேட் மேம்பாலம் அருகில் சுமார் அறுபது வயது மதிக்கத்தக்க மூதாட்டி இறந்து உள்ளார்.

2 full

இறந்த நபர் உடலுக்கு யாரும் உரிமை கோராத நிலையில் இறந்த நபரின் தகவலை கேகே நகர் காவல்நிலைய சட்டம் ஒழுங்கு தலைமை காவலர் தியாகராஜன் அமிர்தம் சமூகசேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமாருக்கு 22-2-2021  திங்கட்கிழமை காலை தகவல்  அளிக்கிறார்.

தகவலின் அடிப்படையில் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் டிவிஎஸ் டோல்கேட் மேம்பாலம் அருகில் சாலையோரம் பெயர் விலாசம்  தெரியாத இறந்த நபர் 60 வயது மதிக்கத்தக்கவர். கருப்பு நிறம். சுமார் ஐந்து அடி உயரம் இருப்பார்.  மீட்டு எடுக்கும் பொழுது அந்த நபரிடம் எவ்வித விலை உயர்ந்த பொருட்களோ, ஆபரணங்களோ கிடையாது.

கேகே நகர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் வீரசிங்கம், தலைமை காவலர் தியாகராஜன், விஜயா, அழகர்சாமி பாய்ஸ் ஆம்புலன்ஸ் ஓட்டுனர் முகமது இலியாஸ், அஜீம் உள்ளிட்டோருடன் ஆதரவற்ற பிரேதத்தை மீட்டு திருச்சிராப்பள்ளி ஓயாமரி மயானத்தில் 22-2-2021 காலை தலைமை காவலர் தியாகராஜன் முன்னிலையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

நல்லடக்கம் செய்யப்பட்ட புகைப்படம் ஒளி ஒலிப் பதிவுகளை ஆவணமாக பொது அறிவிப்பாக வெளியிடப்படுகிறது

3 half

Leave A Reply

Your email address will not be published.