திருச்சி தூய வளனார் கல்லூரியில் தாய்மொழி நாள் விருது வழங்கும் நிகழ்ச்சி !

0
full

இன்று திருச்சி மாவட்டத்தில் உலகத் தாய்மொழி நாளை முன்னிட்டு தமிழகப் பெண்கள் செயற்களம், தமிழரண் மாணவர்கள் நடத்தும் தாய்மொழி நாள் விருது வழங்கும் மற்றும் உறுதியேற்பு விழா 21-02-2021 இன்று தூய வளனார் (செயின்ட் ஜோசப்) கல்லூரியில் நடைபெற்று.

தாய்த் தமிழின் வளர்ச்சிக்கு அடித்தளமாக இருக்கும் தமிழ் ஆசிரியர்கள், பேராசிரியர்கள், தமிழறிஞர்கள் ஆகியோருக்கு மாணவர்களால் சிறப்பாரம் வழங்கி போற்றும் விழா.

poster
ukr

மற்றும் தமிழ் அறிஞர்களின் படம் பொறித்த பலூன் பறக்கவிடும் நிகழ்வும் நடைபெற்றது.
விழாவில் தமிழ்க் குரிசில் சிறப்பாரம் விருது பள்ளி ஆசிரியர்கள் 8 நபர்களுக்கும், கல்லூரி பேராசிரியர்கள் 4 நபர்களுக்கும், தமிழறிஞர்கள் 2 நபர்களுக்கும் வழங்கப்பட்டது.

அத்துடன் விருது பெற்றோர்க்கு மாணவர்கள் சார்பில் தமிழ்சீர் வழங்கி சிறப்பு செயப்பட்டது. மேலும் இந்நிகழ்ச்சியில் முதலாவதாக திருச்சி பொறுப்பாளர் அய்யப்பன் வரவேற்றார், தமிழகப் பெண்கள் செயர்களம் நிர்வாகி பூங்குழலி மற்றும் விதைகள் அறக்கட்டளை நிறுவனர் மயிலை.ப.வேலுமணி தலைமை தாங்கினர். மற்றும் திருச்சி ஒருங்கிணைப்பாளர்கள் இரவி மற்றும் இளன் முன்னிலை வகித்தனர். முடிவில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார் (திருச்சி ஒருங்கிணைப்பாளர் ) நன்றியுரை வழங்கினார்.

 

half 1

Leave A Reply

Your email address will not be published.