திருச்சியில் பைக் மீது லாரி மோதி விபத்து:

0
full

திருச்சியில் பைக் மீது லாரி மோதி விபத்து:

ukr

திருச்சி கே.கே.நகர் பகுதியை சேர்ந்தவர் கிரிஸ்டோபர் மற்றும் இவரது பேரன் மார்ஷல் இருவரும் திருச்சியிலிருந்து லால்குடி நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது காவிரி பாலத்தில் வேகமாக வந்த ஒரு லாரி இருசக்கர வாகனத்தின் பின்னால் மோதியது. இதில் கிறிஸ்டோபர் மற்றும் மார்ஷல் பலத்த காயம் அடைந்தனர்.  அப்பகுதியினர் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் வழியிலேயே கிறிஸ்டோபர் பரிதாபமாக உயிரிழந்தார். மார்ஷலுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நாமக்கல் மாவட்டம் கெங்கவல்லியை சேர்ந்த லாரி டிரைவர் தர்மராஜன் என்பவரை கைது செய்தனர்.

half 1

Leave A Reply

Your email address will not be published.