ஊடகத்தின் நடுநிலை ; தூய வளனார் கல்லூரியில் பயிற்சிப் பட்டறை !

0
1

திருச்சி தூய வளனார் கல்லூரி, தமிழ் ஆய்வுத் துறை மற்றும் வெற்றி மொழி வெளியீட்டகம் மற்றும் நேசம் கலைக்கூடம் இணைந்து மாணவர்களுக்கான படைப்பிலக்கிய பயிற்சிப்பட்டறை கல்லூரியில் பிப்ரவரி 19,20 ஆகிய இரு நாட்கள் நடைபெற்றது.

நிகழ்ச்சியை கல்லூரியின் முதல்வர் ஆரோக்கியசாமி சேவியர் தொடங்கிவைத்து வாழ்த்துரை வழங்கினார். பயிற்சியாளர் ஜா.சலேத் ஒருங்கிணைத்தார். மற்றும் வெற்றிமொழி வெளியீட்டக நிறுவனர் தமிழ் தாசன், நேசம் கலைக்கூடம் இயக்குனர் ராஜசேகரன் முன்னிலை வகித்தனர். பயிற்சிப் பட்டறையில் இரண்டாவது நாளான இன்று (20/2/21) பிசினஸ் திருச்சி ஆசிரியர் பங்கேற்று மாணவர்களுக்கு இடையான கலந்துரையாடல் நடைபெற்றது.
கலந்துரையாடலில் பங்கேற்ற மாணவர்கள் இதழியல் துறை சம்பந்தமாகவும் படைப்பிலக்கியம் பற்றியும் பல்வேறு கேள்விகளை முன்வைக்க, பிஸ்னஸ் திருச்சியில் ஆசிரியர் ஜெடிஆர் விளக்கம் அளித்தார்.

2

ஊடகத்தின் நடுநிலை, உண்மைச் செய்தியை எப்படி மக்களிடம் கொண்டு சேர்ப்பது, பொய்ச் செய்திகளை எப்படி புறந்தள்ளுவது, எழுத்துகள் படைப்புகளைப் பற்றி மக்களிடம் உள்ள மனநிலை, போன்ற பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டது. அதற்கு பிஸ்னஸ் திருச்சியின் ஆசிரியர் ஜெ.டி.ஆர் பதில் கூறினார்.

மேலும் ஊடகத்தின் நடுநிலை என்று கேட்கப்பட்ட கேள்விக்கு ஊடகத்தில் நடுநிலை என்பது ஏமாற்று தன்மை. ஒவ்வொரு ஊடகமும் ஒவ்வொரு சார்புத் தன்மை கொண்டவை. மேலும் நேர்மையின் பக்கமும், பாதிக்கப்பட்ட மக்களின் பக்கமும் நின்று செயல்படுவது மட்டுமே ஊடக அறம் என்று கூறி, பல்வேறு பதில்களை மாணவர்கள் மத்தியில் முன்வைத்தார்.

இதைத் தொடர்ந்து துறை ஒருங்கிணைப்பாளர் ஆரோக்கிய தனராஜ் வாழ்த்து உரை ஆற்றினார். இணை முதல்வர் அலெக்ஸ் ரமணி பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டு உரையாற்றினார். பயிற்சிப் பட்டறையின் இறுதியில் துறைத்தலைவர் பெஸ்கி நிறைவுரை ஆற்றினார்.

3

Leave A Reply

Your email address will not be published.