குப்பை வாங்க மறுப்பதை கண்டித்து கடை வியாபாரிகள் போராட்டம்

குப்பை வாங்க மறுப்பதை கண்டித்து கடை வியாபாரிகள் போராட்டம்
வணிக வளாகங்களில் குப்பைகளை துப்புரவு பணியாளர்கள் வாங்க மறுப்பதாக கூறி திருச்சி மாநகராட்சி கோட்ட அலுவலகம் முன்பு அனைத்து கடை வியாபாரிகள் நல சங்கத்தினர் நேற்று (19/02/2021) போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாநகராட்சிக்கு உரிய வரியை செலுத்தியும் துப்புரவு பணியாளர்கள் குப்பையை வாங்காமல் செல்வதால் வணிக வளாகங்களில் சுகாதாரமற்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தாங்கள் பாதிக்கப்படுவதுடன் தரைக்கடை வியாபாரிகள் பாதிக்கப்படுகின்றனர். இதுகுறித்து பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் குப்பைகளை மாநகராட்சி அலுவலகம் முன்பு கொட்டி போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர். போராட்டத்தில் சங்க தலைவர் முருகேசன் செயலாளர் காளிமுத்து மற்றும் கடை உரிமையாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
