பஞ்சாப் நேஷனல் வங்கி கடைபிடித்த நிதி கல்வியறிவு வாரம்..!

0
1 full

பஞ்சாப் நேஷனல் வங்கி கடைபிடித்த நிதி கல்வியறிவு வாரம்..!

நிதி சார்ந்த திட்டங்கள், சேவைகள், வங்கியில் பெறும் கடன் தொகையை விவேகமான வழியில் செலவு செய்வது, கடன்களை திருப்பிச் செலுத்து வதில் நெறிமுறைகள், பணபரிவர்த்தனை உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளுக்கான டிஜிட்டல் வழிமுறைகளை நோக்கி பொது மக்களை நகர்த்திச் செல்வது உள்ளிட்டவை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ரிசர்வ் வங்கி கடந்த பிப்ரவரி 8-ம் தேதி முதல் நிதி கல்வியறிவு வாரத்தை அறிவித்தது.

இதையடுத்து பஞ்சாப் நேஷனல் வங்கியின் திருச்சி மண்டல அலுவலகமானது 13 மாவட்டங்களில் உள்ள 25 கிளைகளின் மூலம் வங்கி அலுவலக வாசல் மற்றும் பொது மக்கள் கூடும் இடங்களில் ஸ்டால்கள் அமைத்து வங்கி ஊழியர்கள் மற்றும் பிரதிநிதிகள் மூலம் பெரிய அளவிலான பிரச்சாரங்களை மேற்கொண்டன. இப்பிரச்சாரத்தின் போது மத்திய அரசு அறிவித்துள்ள பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா, பிரதான் மந்திரி சூரக்ஷா பீமா யோஜனா, அடல் பென்ஷன் யோஜனா உள்ளிட்ட சமூக பாதுகாப்புத் திட்டங்களினால் விளையும் நன்மைகள் குறித்த பொது மக்களிடம் எடுத்துக் கூறப்பட்டது. மேலும் வங்கியின் ரூபே டெபிட் கார்டு உள்ளிட்ட பல்வேறு சேவைகள், வசதிகள் குறித்து எடுத்துரைத்து பஞ்சாப் நேஷனல் வங்கியில் கணக்கு தொடங்க ஊக்கப்படுத்தப்பட்டனர்.

2 full

பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா
இத்திட்டத்தில் இணைய உங்களது வயது 18 முதல் 50க்குள் இருக்க வேண்டும். பஞ்சாப் நேஷனல் வங்கி உட்பட நீங்கள் வங்கிக் கணக்கு வைத்துள்ள எந்தவொரு வங்கியிலும் இத்திட்டத்தில் இணையலாம். வருடத்திற்கு ரூ.330 பிரீமியம் செலுத்த வேண்டும். இந்த பிரீமியம் ஒவ்வொரு ஆண்டும் உங்களது வங்கிக் கணக்கில் இருந்து ஆட்டோ டெபிட் மூலம் நேரடியாக எடுத்துக் கொள்ளப்படும். ஓரு வேளை பாலிசிதாரர் இறந்து விட்டால், இத்திட்டத்தின் மூலம் ரூ.2 லட்சம் க்ளைம் செய்து கொள்ள முடியும்.

பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா திட்டம்
இது ஒரு விபத்து காப்பீட்டு திட்டம். இது சமூகத்தின் ஏழை மற்றும் குறைந்த வருமானம் உடையவர்களுக்கு நன்மை பயக்கும். இந்த சமூக பாதுகாப்பு திட்டம் அதிக பிரீமியத்தை வசூலிக்காது மற்றும் செலுத்த வேண்டிய பிரீமியம் ஆண்டுக்கு ரூ.12 மட்டுமே ஆகும். வங்கிக் கணக்குகளைச் சேமிக்கும் 18-&70 வயதுடையவர்கள் இந்த திட்டத்தில் சேர தகுதியுடையவர்கள். விபத்து காரணமாக ஏற்படும் இறப்புகள் மற்றும் விபத்து மூலம் ஏற்படும் உடல் குறைபாடுகள் இத்திட்டத்தில் உள்ளன. இந்த திட்டத்தை ஆண்டுதோறும் புதுப்பிக்க முடியும்.

இத்திட்டத்தின் கீழ், நிரந்தரமாக செயல்பட முடியாத, மொத்த இயலாமை மற்றும் தற்செயலான மரணம் ஆகியவற்றின் அடிப்படையில் வழங்கப்படும் பாதுகாப்பு காப்பீடு 2 லட்சம் ஆகும். இருப்பினும், நிரந்தர உடல் இயலாமை ஏற்பட்டால், அதற்கு 1 லட்சம் காப்பீடு ஆகும். இத்திட்டம் மற்ற பாலிசிகளுடன் ஒப்பிடும்போது அதிக பிரீமியம் தொகை செலவு செய்யாமல் விபத்து காப்பீட்டுக் கொள்கையை வழங்குகிறது.இந்தத் திட்டமானது வங்கிக் கணக்கிலிருந்து பிரீமியத்தை தானாக டெபிட் செய்துக் கொள்ளும் வழியை கொண்டுள்ளது. இந்த குறைந்த விலை விபத்து காப்பீட்டு திட்டம் வரிகளைச் சேமிக்கவும் உதவுகிறது.

அடல் பென்ஷன் யோஜனா ஓய்வூதிய திட்டம்
இத்திட்டத்தின் கீழ், 18 முதல் 40 வயது வரையிலான எந்தவொரு இந்திய குடிமகனும் கணக்கைத் தொடங்கலாம். இந்தத் திட்டத்தில் வாடிக்கையாளர் தான் கணக்கு வைத்துள்ள வங்கி கிளை அல்லது தபால் நிலையத்திலிருந்து ஒரு கணக்கைத் திறக்க முடியும். இந்த ஓய்வூதிய திட்டத்தின் கீழ், இணைந்த சந்தாதாரர் தனது கணக்கில் அளிக்கும் பங்களிப்பின் அடிப்படையில் 60 வயதிலிருந்து ஒரு மாதத்திற்கு குறைந்தபட்சம் ரூ.1,000 முதல் ரூ.5,000 வரையில் உத்தரவாத ஓய்வூதியம் பெறலாம். நீங்கள் இத்திட்டத்தில் இணைவதற்கான விண்ணப்பத் தினை பூர்த்தி செய்யும் போதே 60 வருடங்களுக்கு பிறகு எவ்வளவு தொகை பென்ஷனாக வேண்டும் என்பதை யும் பூர்த்தி செய்ய வேண்டும். நீங்கள் பெற நினைக்கும் பென்ஷன் தொகைக்கு ஏற்ப, ஒவ்வொரு மாதமும் பணம் கட்ட வேண்டியிருக்கும். ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதத்தில் இந்த தொகையில் நீங்கள் மாற்றம் செய்து கொள்ளலாம். இந்த திட்டத்தின் சிறப்பம்சமே, 60 வயதுக்கு பின்னர் சந்தாதாரர் எத்தனை ஆண்டுகள் வாழ்கிறாரோ, அத்தனை ஆண்டுகள், சந்தாதாரர் கேட்டிருந்த தொகை கிடைக்கும். ஒரு வேளை சந்தாதாரர் இறந்து விட்டால், நாமினிக்கு இந்த தொகை கிடைக்கும்.

நீங்கள் உங்களது பென்ஷன் திட்டத்தில் குறிப்பிட் டிருந்த நாமினி இறந்துவிட்டால், அவருக்கு பதிலாக வேறு ஒரு நாமினியை நியமித்துக் கொள்ள முடியும். நீங்கள் ஒரு வங்கியில் தொடங்கிய பென்ஷன் கணக்கினை வேறு வங்கிக் கிளைக்கும் மாற்றிக் கொள்ள முடியும். அரசின் இந்த திட்டமானது 60 வயதிற்கு மேல் உள்ள அனைவருக்கும் தேவையான ஒன்று தான்.

3 half

Leave A Reply

Your email address will not be published.