திருச்சி மாநகராட்சியில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி:

0
full

திருச்சி மாநகராட்சியில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி:

half 2

திருச்சி பொன்மலை கணேசபுரத்தை சேர்ந்தவர் ரங்கநாயகி. இவர் காட்டூர்  பகுதியில் தூய்மை காவலராக பணியாற்றி வருகிறார். இவருடன் பணியாற்றும் வேலுச்சாமி என்பவர் ரங்கநாயகி மகனுக்கு மாநகராட்சியில் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பி ரங்கநாயகி ரூபாய் 4 லட்சம் பணத்தை வேலுச்சாமியிடம் கொடுத்துள்ளார்.

ஆனால் நீண்ட நாட்களாகியும் வேலை வாங்கித் தராமலும் பணத்தை திரும்பி தராமலும் ஏமாற்றியுள்ளார். மேலும் பணத்தை கேட்டதற்கு தர மறுத்து மிரட்டியுள்ளார். இந்நிலையில் நேற்று (19/02/2021) ரங்கநாயகி அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

half 1

Leave A Reply

Your email address will not be published.