திருச்சியில் அசைவத்தில் அசத்தும் கொங்கு ஸ்பெஷல் ஜீனியர் குப்பண்ணா

0

திருச்சியில் அசைவத்தில் அசத்தும் கொங்கு ஸ்பெஷல் ஜீனியர் குப்பண்ணா

வாழ்வில் இன்றியமையாத ஒன்று உணவு. உணவு தேடி எத்தனை எத்தனையோ பயணங்களை மேற்கொள்ளும் அளவிற்கு வாழ்க்கைக்கும் சாப்பாட்டிற்குமான இணைப்பு மிக நெருங்கியது. “கல்யாண சமையல் சாதம், காய்கறிகளும் பிரமாதம்..,” “இந்த பொறப்பு தான் ரொம்ப ருசிச்சு சாப்பிட கிடைச்சது” என அன்று முதல் இன்று வரை சத்தம் போட்டு பாட்டுப்பாடி உணவின் ருசியை கொண்டாடி கொண்டிருக்கிறோம்.

இப்படி கொண்டாடும் உணவுகளில், நல்லம்பட்டி சிக்கன், பள்ளிப்பாளையம் சிக்கன், ஜப்பான் சிக்கன், பெப்பர் ப்ரை, கொங்கு ஸ்பெஷல் பிரியாணி என கொங்கு நாட்டு சமையல் சுவைபட உணவுப் பிரியர்களுக்கு பரிமாறும் ஹோட்டல் தான் ஜூனியர் குப்பண்ணா.! அசைவ உணவுகளில் காரைக்குடிக்கு எப்படி ஒரு முக்கியத்துவம் உண்டோ அதே போல் கொங்கு மண்டல் அசைவ உணவும் தவிர்க்க முடியாத இடத்தில் உள்ளது.

ஹோட்டல் சாம்ராஜ்யத்தில் மிக முக்கிய பங்காற்றும் ஜூனியர் குப்பண்ணா, தமிழகத்தில் 40 கிளைகளுடனும், கேரளா, ஹைதராபாத் போன்ற மாநிலங்களிலும் சிங்கப்பூர், நெதர்லாந்து உள்ளிட்ட வெளிநாடுகளிலும் கிளை பரப்பி கொங்கு ஸ்பெஷல் உணவுவினை உலகம் முழுக்க பரவச் செய்யும் அரும் பணியைச் செய்து வருகின்றன. ஈரோட்டை பூர்வீகமாக கொண்ட குப்பண்ணா, முதன்முதலில் ஈரோட்டில் உணவகம் ஒன்றை ஆரம்பிக்கிறார்.

குப்பண்ணா உணவகம், உலகம் முழுக்க பரந்து விரிந்து கிளை பரப்பும் என அப்போது அவர் கணித்திருக்கமாட்டார். அதை சாத்தியப்படுத்தியது அவரின் மூன்று மகன்களில் மூன்றாவதாக பிறந்த மூர்த்தி. அவரால் வளர்க்கப்பட்ட குப்பண்ணா உணவகத்தின் கிளைகள், ஹோட்டல் தொழிலில் ஆர்வமும், ஈடுபாடும் கொண்ட சிறந்தவர்களை தேர்வு செய்து நிர்வகித்து வருகிறது. அப்படிப்பட்டவர்களில் ஒருவர் தான் திருச்சி அண்ணாமலை நகர், ஏ.பி.சி. மருத்துவமனைக்கு அருகில் ஜூனியர் குப்பண்ணா ஹோட்டலை நிர்வகித்து வரும் குப்பண்ணா குடும்பத்தின் நெருங்கிய நண்பரான ஹேமந்த்குமார்.

food

இன்ஜினியரிங் முடித்த ஹேமந்த்குமார், ஹோட்டல் தொழிலுக்கு புதுசு, ஆனாலும் இந்த தொழிலில் தினமும் ஏற்படும் அனுபவம் அவருக்கு ஏராளமான விஷயங்களை கற்றுத் தருகின்றன. அதுவே ஜூனியர் குப்பண்ணாவின் தரத்தை மேலும் மேலும் வளர்த்து வாடிக்கையாளர்களை பெருகச் செய்து வருகிறது.

“நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்ற வரியின் அர்த்தம் உணர்ந்து உணவையே மருந்தாக கொடுக்கிறார். அம்மா கையில் சமைத்து சாப்பிடும் அதே ருசியோட, தயாரிக்கும் உணவு ஒவ்வொன்றையும் தன்னுடைய மேற்பார்வையில பார்த்துப் பார்த்து சமைத்து வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்துகிறார். “உணவு விற்பனையை தொழிலாக மட்டுமல்லாமல் வாடிக்கையாளர்களின் உடல் நலத்தையும் கருத்தில் கொண்டு, உணவு சமைக்க தேவைப்படும் ஒவ்வொரு பொருளையும் மிகவும் தரமானவற்றையே தேர்வு செய்து வாங்கி பயன்படுத்துகிறோம்” என்கிறார் ஹேமந்த்குமார்.

“அரிசி, பருப்பு, தேங்காய், தக்காளி, வெங்காயம், இஞ்சி, பூண்டு மட்டுமின்றி கருவேப்பிலை, கொத்தமல்லி உட்பட அனைத்தையுமே பார்த்துப் பார்த்து வாங்கி பயன்படுத்துகிறோம். உணவில் சின்ன வெங்காயத்தின் அருமை தெரிந்து அதனையே பயன்படுத்துகிறோம். கோழியின் தோலை இயந்திரத்தில் உரிப்பதைக் காட்டிலும், கையில் உரிப்பதே நல்லது என்பதால் ஒவ்வொரு கோழியும் தேர்ந்தெடுத்து கையாலே உரிச்சி, சுத்தம் பண்ணி சமையலறைக்கு கொண்டு வருகிறோம். கொங்கு நாட்டு ஆடுகளை மட்டுமே தரம் குறையாமல் தேர்வு செய்து சமையலுக்கு பயன்படுத்துகிறோம்.

ஜூனியர் குப்பண்ணாவில் சமைக்கும் உணவுகளில் தரமான சமையல் எண்ணெய்களை பயன்படுத்துவதோடு அவற்றை குறைவாகவே உணவில் சேர்க்கிறோம். கொங்கு ஸ்பெஷல் உணவின் முக்கியத்துவம் என்னவென்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிட ஏதுவாக காரம் சரியான அளவில் சேர்க்கப்படுகிறது.

ஜூனியர் குப்பண்ணாவில் பரிமாறப்படும் பிரியாணிக்கு ஏராளமான உணவுப் பிரியர்கள் உண்டு. மட்டன் பிரியாணி, சிக்கன் பிரியாணி, சிக்கன் தண்ணி குழம்பு, நெத்திலி ஃப்ரை, பிரான் பெப்பர் ஃப்ரை, இட்லி, தோசைக்கு குடல் குழம்பு, பிச்சு போட்ட நாட்டு கோழி ஃப்ரை, நாட்டு கோழி சுக்கா, கொங்கு நாட்டு சிக்கன் விருந்து, ஜப்பான் சிக்கன் என அசைவ உணவை அடுக்கிக் கொண்டே போகலாம். குறிப்பாக ஜப்பான் சிக்கன் கொஞ்சம் இனிப்பு சுவை கலந்து இருப்பதால் குழந்தைகள் மிகவும் விரும்பி வாங்கி உண்கின்றனர்” என்றார்.
அசைவ உணவு மட்டுமின்றி சைவ உணவும் கொங்கு மண்டல் சுவையுடன் ஜூனியர் குப்பண்ணாவில் கிடைக்கின்றன. வாடிக்கை யாளர்களின் இல்லம் தேடி கொண்டு செல்வதற்காக ஜூனியர் குப்பண்ணாவில் டோர் டெலிவரி வசதியும் உள்ளது. ஐந்து கி.மீ. வரை செல்வதற்கு டெலிவரி சார்ஜ் இல்லை. அதற்கு மேல் என்றால் தொலைவுக்கு ஏற்ப குறைவான கட்டணத்தையே வசூலிக்கிறார்கள்.

அண்ணாமலை நகருக்கு குடும்பத்துடன் சென்று ஜூனியர் குப்பண்ணாவில் அசைவ உணவை ஒருபிடி பிடிக்கலாம். இல்லையென்றால் 9600896333 என்ற எண்ணிற்கு அழைத்தால் நீங்கள் கேட்டும் வெரைட்டியை சுவை, சூடு குறையாமல் உங்கள் வீட்டிற்கு வாங்கியும் உண்ணலாம். “தரத்தில் சமரசம் செய்து கொள்ளாமல் மிகுந்த கவனம் செலுத்துவதாலேயே வாடிக்கையாளர்
களின் தொடர் வருகை சாத்தியமாகிறது” எனச் சொல்லும் ஹேமந்த்குமாரின் வார்த்தைகள் ஜூனியர் குப்பண்ணாவிற்கு சென்று சாப்பிடத் தோன்றுகிறது.!

gif 4

Leave A Reply

Your email address will not be published.