திருச்சியில் காதலிக்கு கத்திக்குத்து காதலன் தற்கொலை முயற்சி

0

திருச்சியில் காதலிக்கு கத்திக்குத்து காதலன் தற்கொலை முயற்சி

food

திருச்சி மாவட்டம் லால்குடி வெள்ளனூரை சேர்ந்தவர் மணிகண்டன் (29) இவரும் திருச்சி உறையூரைச் சேர்ந்த சுகன்யா என்பவரும் 3 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் சில மாதங்களாகவே சுகன்யா மணிகண்டனுடன் பழகுவதை தவிர்த்து வந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது . இந்நிலையில் மணிகண்டன் நேற்று மாலை சுகன்யாவை சந்திக்க அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கும் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த மணிகண்டன் கத்தியால் சுகன்யாவை சரமாரியாக தாக்கினார். பின்பு தான் வைத்திருந்த விஷத்தை காதில் ஊற்றிக் கொண்டு மயங்கி விழுந்தார். இதனை கண்ட சுகன்யாவின் உறவினர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த ஸ்ரீரங்கம் போலீஸ் உதவி கமிஷனர் சுந்தரமூர்த்தி உறையூர் இன்ஸ்பெக்டர் மணி ஆகியோர் சுகன்யா மற்றும் மணிகண்டனை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.மேலும் போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

gif 4

Leave A Reply

Your email address will not be published.