இன்று ரத ஸப்தமி (19-02-2021)

0
1

தைமாதம் முதல் தேதியை மகர சங்கராந்தி என்றும், உத்திராயனப் புண்ணிய காலம்  என்றும் சொல்வதுண்டு.

ரத சப்தமியை சூரிய பகவானின் ரதச் சக்கரங்கள் திசைமாறும் நாள் என்று சொல்வர்..

உத்திராயனப் புண்ணியகாலத்தின் மிக முக்கியமான நாள் ரதசப்தமி. அன்றுதான் சூரிய பகவானின் ரதத்தின் திசை மாறும். அன்று முதல் தொடரும் நாள்கள் எல்லாம் மிகவும் புண்ணிய பலன்களைத் தருபவை!

2

அதனால் ரதசப்தமி நாளில் சூரிய பகவானை வழிபடுவது நல்லது. அன்று செய்யப்படும் வழிபாடுகள், சூரியக் கிரகண காலத்தில் கிடைக்கும் புண்ணிய பலன்களைப் போல் பன்மடங்கு பலன்களைத் தருபவை என்றும் முன்னோர் கூறுவர்.

இந்த நாளில்தான் பீஷ்மர் தன் உயிரைத் துறந்து மோட்சம் எய்தினார்.இன்று எருக்க இலை கொண்டு சூரியனை பூசை செய்து, சர்க்கரை பொங்கல் வைத்து வழிபட வேண்டும். ”ஓம் நமோ ஆதித்யாய: ஆயுள், ஆரோக்கியம், புத்திர் பலம் தேஹிமே சதா’ என்று அவரைப் பிரார்த்தித்து வழிபட்டு வரம் பெறுவோம்.

3

Leave A Reply

Your email address will not be published.