வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி
திருச்சி கிராப்பட்டியில் வெளிநாட்டில் வேலை வாங்கி தரும் தனியார் ஏஜென்சி கடந்த 4 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் பங்குதாரர் மற்றும் மேலாளராளர் தஞ்சாவூரை சேர்ந்த புரூஸ்லி (38) என்பவர் கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் பகுதியை சேர்ந்த ஜான் ஜெரால்டு என்பவரிடம் அரபு நாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி, 15,000 முன்பணம் பெற்றுள்ளார். மேலும், இதேபோல், 42 பேரிடம் என ரூ.16 இலட்சத்து 45 ஆயிரம் பணம் பெற்றுக்கொண்டு வேலை வாங்கி தராமல் ஏமாற்றியுள்ளார்.
இந்நிலையில், வேலையும் வாங்கி தராமல், கொடுத்த பணத்தையும் திருப்பி கொடுக்காமல் ஏமாற்றி வருவதாக ஜான் ஜெரால்டு திருச்சி எடமலைப்பட்டி போலீசில் புகார் அளித்தார். இதனையடுத்து, புரூஸ்லி, காஜாமைதீன், லதா, ரவீந்திரன் ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
