திருச்சி அரசு மருத்துவமனையில் கரோனா ரிசல்ட்க்கு கியூ.ஆர்.கோடு அறிமுகம்

திருச்சி அரசு மருத்துவமனையில் கரோனா ரிசல்ட்க்கு கியூ.ஆர்.கோடு அறிமுகம்
திருச்சி கி.ஆ.பெ விசுவநாதம் அரசு மருத்துவமனை கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை முடிவை கியூ.ஆர்.கோடு மூலம் அறியும் தொழில்நுட்பம் நேற்று (18.02.2021) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனா பரிசோதனை முடிவுகள் குறுந்தகவல் மற்றும் ஆவணங்கள் மூலம் அனுப்பப்பட்டது. தற்போது கியூ.ஆர்.கோடு தொழில்நுட்ப உதவியுடன் எங்கிருந்து வேண்டுமானாலும் பரிசோதனை முடிவுகளை பார்க்க இயலும். இதனால் ஆவண மோசடிகள் நடைபெறாமல் தடுக்க இயலும். இத்தகவலை மருத்துவ கல்லூரி டீன் வனிதா தெரிவித்துள்ளார்.
