பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்களுக்கு புதிய செயலி அறிமுகம்:

0
1

பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்களுக்கு  புதிய செயலி அறிமுகம்:

மத்திய வெளியுறவு துறை மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த பாஸ்போர்டு சேவைகளை டிஜி லாக்கர் என்ற செயலி முறையை 26.01.2021 முதல் அறிமுகப்படுத்தியுள்ளது.

.இதுகுறித்து திருச்சி மண்டல பாஸ்போர்ட் அலுவலர் ஆர்.ஆனந்த் கூறியதாவது:

2

பாஸ்போர்ட் விண்ணபத்தாரர்கள் ஆவணங்களை  செய்ய நேரடியாக கொண்டு செல்லாமல் டிஜிட்டல் முறையில் பரீசீலனை செய்து கொள்ள இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த டிஜி லாக்கர் செயலியில் உண்மை சான்றுகளை ஸ்கேன் செய்து சேமித்து வைக்க முடியும்.  பிறகு, விசாரணையின் போது தொடர்புயை துறை இணைய தளங்களுக்கு பகிர முடியும்.  இதனால், உண்மை சான்றுகள் திருட்டு போவது, சேதமடைவது தவிர்க்கலாம்.

ஆதார் அடிப்படையில் செயல்படும் இந்த டிஜி லாக்கரை ஒரு முறை பாஸ்வேர்டு பயன்படுத்தி திறக்கலாம் என்பதால் பாதுகாப்புக்கு உத்தரவாதம். டிரைவிங் லைசென்ஸ், ஆர்.சி. புத்தகம், ஆதார் ஆவணங்கள் என எல்லாமே டிஜிட்டல் வடிவில் டிஜி லாக்கர் மூலம் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. வாகன சோதனையின் போது இவற்றை காண்பிக்கலாம். வாக்காளர் அட்டை, பள்ளி, பல்கலைக்கழக சான்றிதழ்கள், பான் கார்டு போன்றவற்றையும் இதில் சேமித்து வைக்கலாம்.

விண்ணபத்தார்கள் தங்களது விண்ணப்ப மனுவின் தற்போதைய நிலை, போலீஸ் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு விட்டதா என்பதை 1800 258 1800 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் மற்றும் வாட்ஸ்அப் எண் 7598507203 மூலம் தெரிந்து கொள்ளலாம்.

3

Leave A Reply

Your email address will not be published.