திருச்சியில் நாளை  (20.02.2021) காஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம்:

0
full
திருச்சியில் நாளை  (20.02.2021) காஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம்:
எரிவாயு நுகர்வோர்களுக்கு சிலிண்டர் வழங்குவதில் காணப்படும் காலதாமதம் மற்றும்
poster
முறைகேடுகள் போன்ற குறைபாடுகளைகளையும் பொருட்டு திருச்சி மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் தலைமையில் திருச்சி கிழக்கு மற்றும் மேற்கு வட்டங்களுக்குட்பட்ட எரிவாயு முகவர்கள், எண்ணெய் நிறுவன மண்டல மேலாளர்கள் மற்றும் எரிவாயு நுகர்வோர்கள் ஆகியோர்கள் கலந்து கொள்ளும் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் திருச்சி மேற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் 20.02.2021 சனிக்கிழமை காலை 11.00 மணியளவில் நடைபெறவுள்ளது.
ukr
இக்கூட்டத்தில் திருச்சி  கிழக்கு மற்றும் மேற்கு வட்டங்களுக்குட்பட்ட
எரிவாயு நுகர்வோர்கள் தங்களது குறைகளை பதிவு செய்து நிவாரணம் பெற்றுக்கொள்ள
அறிவுறுத்தப்படுகிறது. இக்குறை தீர்க்கும் கூட்டத்தில் திருச்சி கிழக்கு மற்றும் மேற்கு வட்டங்களுக்குட்பட்ட நுகர்வோர்கள்,  அங்கீகரிக்கப்பட்ட தன்னார்வ நுகர்வோர் அமைப்புகள் மற்றும் நுகர்வோர் நடவடிக்கை குழுக்களின் பிரதிநிதிகள், இக்கூட்டத்தில் கலந்து கொண்டு காஸ் சிலிண்டர் விநியோகம் தொடர்பான குறைபாடுகளை தெரிவித்து பயன்பெறலாம். இத்தகவலை  மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு.இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.
half 1

Leave A Reply

Your email address will not be published.