திருச்சியில் தீத்தடுப்பு குறித்த கலந்தாய்வு கூட்டம் 

0
full

திருச்சியில் தீத்தடுப்பு குறித்த கலந்தாய்வு கூட்டம் 

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் பழைய இரும்பு கடைகள்,
பழைய காகித கடைகள், நெகிழி கடைகள் மற்றும் சேமிப்பு கிடங்குகள் ஆகியவற்றில் கடைகள் பராமரிப்பு மற்றும் திடக்கழிவு மேலாண்மை குறித்த கலந்தாய்வு கூட்டம் நேற்று (18.02.2021)  மாநகராட்சி ஆணையர் அவர்களின் தலைமையில், மாநகராட்சி மைய அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.

ukr

இக்கூட்டத்தின்  கோடை காலங்களில் தீப்பற்றாமல் இருக்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு மற்றும் தீ தடுப்பு ஒத்திகை ஆகியவை தீயணைப்பு துறையினரால் செய்து காண்பிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் மாநகர மக்கள் தங்கள் வீடுகளில் சேகரமாகும் குப்பையை பிரித்து பெற வியாபாரிகள் தெரிவித்தனர். மேலும் தீயணைப்பு உபகரணங்களை தங்களது கடைகளில் நிறுவுவதாக உறுதியளித்தனர். அனைத்து கடைகளும் அச்சம் மற்றும் அருவருக்கத்தக்க தொழில் உரிமம் பெற்று நடத்த தெரிவிக்கப்பட்டது. உரிமம் பெறாத கடைகள் இயங்க அனுமதிக்கப்படமாட்டாது எனவும் மாநகராட்சி ஆணையர் தெரிவித்தார்.

poster


இதில் மாநகராட்சி ஆணையர்  சு. சிவசுப்பிரமணியன், நகர் நல அலுவலர் டாக்டர். எம்.
யாழினி, ஜி. தியாகராஜன், நிலைய அலுவலர், தீ தடுப்பு குழு, தீயணைப்பு அலுவலர்கள் மற்றும்
காயலாங்கடை வியாபாரிகள் கலந்து கொண்டனர்,

half 1

Leave A Reply

Your email address will not be published.