அனைத்து மக்கள் ஜனநாயக கட்சி முதல் மாநில செயற்குழு கூட்டம்

அனைத்து மக்கள் ஜனநாயக கட்சி முதல் மாநில செயற்குழு கூட்டம்

புதிதாக துவங்கப்பட்ட அனைத்து மக்கள் ஜனநாயக கட்சியின் முதல் மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் இன்று (19.02.2021) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை மாநிலத்தலைவர் ஆரோக்கியதாஸ் துவங்கி வைத்தார். கட்சியின் பொதுச் செயலாளர் பேராயர் ஆர். தனராஜ் முன்னிலை வகித்தார். மேலும், அவர் கூறியதாவது, விவசாயிகளின் நலன், சிறு,குறு வியாபாரிகளின் நலன், மதச்சார்பற்ற சமுதாயம், தாழ்த்தப்பட்ட சமூகத்திலிருந்து கிறிஸ்தவ, இஸ்லாம் மதங்களுக்கு மாறிய மக்களுக்கு அவர்களின் பிறப்பின் அடிப்படையிலான வாழ்வாதார உரிமைகளைப் பெற்றுத்தருவது, என்னும் நோக்கில் இக்கட்சி செயல்படும் என கூறினார்.
மேலும், இந்நிகழ்ச்சியில், மாநிலத்துணைத்தலைவர், ஜெயபாலன், மாநில இணைச் செயலாளர்கள், வின்சன்ட், இயேசுதாஸ், ஆனந்தராஜ், மாநில இணைச்செயலாளர் கணேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
