திருச்சி அரசு மருத்துவமனையில் ஆதரவற்றோர்களுக்கான சிறப்பு வார்டு

0

திருச்சி அரசு மருத்துவமனையில் ஆதரவற்றோர்களுக்கான சிறப்பு வார்டு

சந்தா 2

திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில்  ஆதரவற்றோர்களுக்கான சிறப்பு வார்டு நேற்று (17.02.2021) தொடங்கப்பட்டது.  அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற முடியாமல் தவிக்கும் ஆதரவற்றோர்களுக்கு உதவுவதற்காக சிறப்பு வார்டு அமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

திருச்சி அரசு மருத்துவமனையில் 20 படுக்கைகள் கொண்ட சிறப்பு வார்டை மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு, நேற்று (17.02.2021) திறந்து வைத்தார். இந்நிகழ்வில், மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதன் கலந்து கொண்டார். மேலும், இந்த சிறப்பு வார்டில் சிகிச்சை பெறும் ஆதரவற்றோர் பயன்பெறும் விதத்தில் அன்பில் பரிசு என்ற தலைப்பில் அலமாரிகள் வைக்கப்பட்டுள்ளது. இதில், உதவும் உள்ளங்கள் உடைகள், தட்டு, தம்ளர் ஆகியவற்றை வைக்கும் படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

‌சந்தா 1

Leave A Reply

Your email address will not be published.