திருச்சி விமான நிலையத்தில் போலீஸ் என கூறி ரூ.6 இலட்சம் தங்கம் கொள்ளை:

0
1 full

திருச்சி விமான நிலையத்தில் போலீஸ் என கூறி ரூ.6 இலட்சம் தங்கம் கொள்ளை:

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தெற்கு காரைக்குடி கருங்குளத்தை சேர்ந்தவர் நகை வியாபாரி வெங்கடேஸ்வரன். இவர் வெளிநாடுகளிலிருந்து கொண்டு வரும் தங்க நகைகளை வாங்கி விற்பனை செய்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மலேசியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட 16 ¼ பவுன் தங்க நகையுடன் விமான நிலையத்தில் வெளியே வந்தபோது, காரில் வந்த மர்மநபர்கள் போலீஸ் என கூறி வெங்கடேஸ்வரனை கடத்தி சென்றனர். பின்பு அவரிடம் இருந்த 6 .இலட்சம் மதிப்பிலான 16 ¼ பவுன் தங்க நகையை பறித்து கொண்டு மாத்தூர் பகுதியில் இறக்கி விட்டு சென்றுள்ளனர்.

2 full

இதயைடுத்து, வெங்கடேஸ்வரன் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

3 half

Leave A Reply

Your email address will not be published.