திருச்சியில் மார்ச் 5 தபால் சேவை குறைதீர்க்கும் முகாம்:

0
full

திருச்சியில் மார்ச் 5 தபால் சேவை குறைதீர்க்கும் முகாம்:

திருச்சியில் மார்ச் 5 -ந்தேதி  மாநில அளவிலான தபால் சேவை குறைதீர்க்கும் முகாம் திருச்சி தலைமை தபால் நிலைய கட்டிட வளாகத்தில் காலை 10.30 மணி அளவில் நடைபெற உள்ளது . இந்த முகாமில் குறைகள் தொடர்பான புகார்கள் வருகிற 23 – ந்தேதிக்குள் வந்து சேர வேண்டும் . தபால் சம்பந்தப்பட்ட புகாரில் தபால் அனுப்பப்பட்ட தேதி மற்றும் நேரம் அனுப்பியவர் மற்றும் பெறுபவரின் முகவரி , ரசீது எண் , (மணியார்டர்) துரிததபால், பதிவுத்தபால் ஆகிய  விவரங்களை குறிப்பிட்டிருக்க வேண்டும் .

half 2

சேமிப்பு வங்கி , அஞ்சல் காப்பீடு , கிராமிய அஞ்சல் காப்பீடு சம்பந்தமாக இருப்பின் கணக்கு எண் கணக்கு வைத்திருப்பவரின் பெயர் மற்றும் முகவரி , பாலிசிதாரரின் பெயர் மற்றும் முகவரி பணம் கட்டிய முழுவிவரம் பணம் செலுத்தி அலுவலகத்தின் பெயர் அஞ்சல் துறை சம்பந்தப்பட்ட கடிதத் தொடர்புகள் ஏதேனும் இருப்பின் அதனைபுகார் தபாலுடன் இணைக்கவேண்டும்

poster

புகார் மனு கொடுத்து அதற்குரிய அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அளித்த பதில் திருப்தி அடையாதவர்கள் மட்டும் தங்களது குறைகளை அனுப்பி வைக்கவேண்டும் . குறைகளை சொர் ணம் , உதவி இயக்குனர் ( காப்பீடு மற்றும் புகார் ) அஞ்சல்துறை தலைவர் அலுவலகம் , மத்திய மண்டலம் , திருச்சி – 620 001 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் . தபால் உறையின் மீது முன்பக்க மேல் பகுதியில் ‘ அஞ்சல் சேவை குறை தீர்க்கும் முகாம் – மார்ச் 2021 ‘ என்று தெளிவாக குறிப்பிட்டு அனுப்ப வேண்டும் .

கொரோனா பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இம்முகாம் காணொலி காட்சி , தொலைபேசி உரையாடல் , வாட்ஸ் – அப் அழைப்பு மூலமாக நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது . எனவே புகார் தாரர்கள் தங்களது செல்போன் மற்றும் அருகில் இருக்கும் அஞ்சல் முகவரி ஆகியவற்றை தவறாமல் குறிப்பிட வேண்டும். இத்தகவலை மத்திய மண்டல அஞ்சல்துறைத் தலைவர் கோவிந்தராஜன் தெரிவித்துள்ளார்.

half 1

Leave A Reply

Your email address will not be published.