திருச்சியில் ரூ.2.59 கோடி மதிப்பீட்டில் கிழக்கு வட்டாட்சியர் புதிய அலுவலகம் 

0

திருச்சியில் ரூ.2.59 கோடி மதிப்பீட்டில் கிழக்கு வட்டாட்சியர் புதிய அலுவலகம் 

திருச்சி,  கொட்டப்பட்டில் கிழக்கு வட்டாட்சியர் புதிய அலுவலகம் ரூ.2.59 கோடி மதிப்பீட்டில் கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை  சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் எஸ்.வளர்மதி ஆகியோர் மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு, இ.ஆ.ப., தலைமையில் தொடங்கி வைத்தார்கள்.

சந்தா 2

திருச்சியில் கிழக்கு வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் ரூ.259.66 இலட்சத்தில் கட்டுவதற்கு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்த வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் தரைதளம் 6348 சதுர அடியிலும், முதல் தளம் 6348 சதுர அடியிலும் திருச்சி கிழக்கு வட்டாட்சியர் எல்லைக்குட்பட்ட கொட்டப்பட்டில் கட்டப்பட உள்ளது. இப்பணியானது 17.12.2021 முதல் துவக்கப்பட்டு 8 மாத காலத்திற்குள் கட்டி முடிக்கப்பட்டு முழு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

‌சந்தா 1

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் த.பழனிகுமார், பொதுப்பணித்துறை
செயற்பொறியாளர் (கட்டடம்) சிவக்குமார், திருச்சிராப்பள்ளி வருவாய் கோட்டாட்சியர்
விஸ்வநாதன், வட்டாட்சியர் முகுந்தன், நகர கூட்டுறவு வங்கி தலைவர் வி.பத்மநாபன்,
முன்னாள் மாமன்ற உறுப்பினர் மலைக்கோட்டை ஐயப்பன், அமராவதி நுகர்வோர் கூட்டுறவு
மொத்த விற்பனை பண்டகச்சாலை தலைவர் ஏர்போர்ட் விஜி மற்றும் பலர் உடனிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.