திருச்சியில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை :

திருச்சியில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை :
திருச்சி உறையூரை சேர்ந்தவர் சங்கர்.இவர் ஓவியராக பணிபுரிந்து வருகிறார். குடும்பத்துடன் தனது சொந்த ஊருக்கு சென்று விட்டு நேற்று முன்தினம் வீடு திரும்பியுள்ளார். இந்நிலையில், வீட்டில் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
வீட்டின் பின்பிறமாக கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள் பீரோவை உடைத்து 6 பவுன் தங்க நகைகள், ரூ. 13 இலட்சம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து சங்கர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
