22.02.2021 முதல் அஞ்சலகங்களில் ஆதார் திருத்த சிறப்பு முகாம்: 

0
full

22.02.2021 முதல் அஞ்சலகங்களில் ஆதார் திருத்த சிறப்பு முகாம்: 

மத்திய அஞ்சல் மண்டலத்தில் தற்போது 373 அஞ்சலகங்களில் ஆதார் சேவை மையம் செயல்படுகிறது. திருச்சி மத்திய மண்டலத்தில் உள்ள அஞ்சலகங்களில் ஆதார் திருத்த சிறப்பு முகாம் 22.02.2021 முதல் துவங்குகிறது.  பொதுமக்கள் ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்கவும் , ஆதாரில் திருத்தவும் சிறப்பு மேளா தேர்ந்தெடுக்கப்பட்ட அஞ்சலகங்களில் 22.02.2021 முதல் 27.02.2021 வரை காலை 8 மணி முதல் மாலை 8 மணி வரை நடைபெறும்.

ukr

இதற்காக , முன்கூட்டியே  பதிவு செய்து டோக்கன் பெற்றுக்கொள்ள வேண்டும் . 15 வயது நிரப்பிவர்களுக்கு  ஆதார் பதிவு , திருத்தம் செய்யக் கட்டணம் கிடையாது .  பெயர், முகவரி, செல்போன் எண், இ-மெயில் முகவரி ஆகியவற்றை திருத்த கட்டணம் வசூலிக்கப்படும்.

poster

மேலும் விவரங்களை https : //uidai.gov.in/images | commdoc / valid_documents list.pdf என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம் . இச்சிறப்பு முகாமிற்காக , சிறப்பு வாடிக்கையாளர் தொலைபேசி எண் 0431 2419707 மண்டல அள வில் நிறுவப்பட்டுள்ளது . பொது மக்கள் இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம். மத்திய மண்டலத்தில் இயங்கி வரும் அஞ்சல் ஆதார் சேவை மையங்களை https://cutt.ly.Eklncwk என்ற இணையதளத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம். இத்தகவலை திருச்சி மத்திய மண்டல அஞ்சல்துறைத் தலைவர் அ . கோவிந்தராஜன் தெரிவித்துள்ளார்.

half 1

Leave A Reply

Your email address will not be published.