திருச்சி நாகநாதர் கோவிலில் புதிய அர்ச்சகர் நியமனத்திற்கு எதிர்ப்பு

0

திருச்சி தெப்பக்குளம் பகுதியில் அமைந்துள்ள ஆனந்தவல்லி சமேத நாகநாதர் சுவாமி கோவில் கோவிலில் ஆகம விதிகளை மதிக்காமல் பூஜை செய்ததாக அர்ச்சகர் திலீபன் மற்றும் அவரது தம்பி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சில நாட்களுக்கு முன் சிவனடியார்கள், கோவில் செயல் அதிகாரியிடம் புகார் மனு கொடுத்திருந்தனர்.

சந்தா 2

தொடர்ந்து தாயுமான சுவாமி கோவில் உதவி ஆணையர் விஜயராணி விசாரணை நடத்தியதுடன்  திலீபனை கடந்த 14ம் தேதி பணிநீக்கம் செய்துடன், புதிய அர்ச்சகரை நியமித்தார்.நேற்று பஞ்சமி திதி , அதனால் காலை முதலே பக்தர்கள் அதிகமாக கோவிலுக்கு வந்திருந்தனர். அப்போது, பழைய அர்ச்சகர் திலீபன்,  புதிய அர்ச்சகரை தடுத்ததுடன், கருவறைக்குள் நுழைந்து பூஜை செய்ய எதிர்ப்பு தெரிவித்து, நான்தான் பூஜை செய்வேன், இங்கு யாரும் வரக்கூடாது என்று வாக்குவாதம் செய்தார்.

தகவல் அறிந்த கோட்டை போலீசார் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் அங்கு வந்து இருதரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்திய பின், நாளை முதல் மாசி பிரம்மோற்சவம் தொடங்க இருப்பதால், திருவிழா முடியும் வரை பிரச்சினையின்றி பூஜைகள் நடைபெற வேண்டும். ஆகையால். அர்ச்சகர் திலீபனே பூஜைகள் நடத்தவும், அவருக்கு உதவியாக கூடுதலாக ஒரு அர்ச்சகரை நியமிக்கவும் முடிவு செய்யப்பட்டு திலீபனே பூஜைகள் செய்தார்.

 

‌சந்தா 1

Leave A Reply

Your email address will not be published.