திருச்சி என்ஐடியில் நவீன உடற்பயிற்சி கூடம்

திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகம் இயக்குநர் டாக்டர் மினி ஷாஜி தாமஸ், கடந்த 15 ஆம் தேதி புதிய நவீன உடற்பயிற்சி கூடத்தைத் திறந்து வைத்தார், டாக்டர் உமாபதி, பதிவாளர் முன்னிலையில், டாக்டர். குமரேசன், டீன் (மாணவர் நலன்), டாக்டர் துரைசெல்வம், டீன்
(திட்டமிடல் மற்றும் மேம்பாடு) ,பிற அதிகாரிகள் மற்றும் மாணவர் பேரவை
உறுப்பினர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
இதில் உட்புற பூப்பந்து மைதானங்கள், கைப்பந்து மற்றும் கூடை-பந்து மைதானங்கள், கால்பந்து மைதானம் மற்றும் தடகள தடங்கள் உள்ளன. அதிநவீன உடற்பயிற்சி உபகரணங்களுடன் புதிய கூடுதல் வசதிகள் ரூ.35 லட்சத்தில் செய்யப்பட்டுள்ளது. தொடக்க விழாவில், இயக்குநர் புதிய கட்டமைப்பு வளாக சமூகத்தினரின் உடற்தகுதி குறித்து அதிக கவனம் செலுத்துவதோடு, உடற்பயிற்சி ஆர்வமுள்ள மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களை ஊக்குவிக்கவும் உதவும் என நம்பிக்கை தெரிவித்தார்.
