மணப்பாறை அருகே 22 மயில்கள் மர்ம சாவு:

மணப்பாறை அருகே 22 மயில்கள் மர்ம சாவு:

தேசிய பறவையான மயில்கள் மர்மமான முறையில் இறந்து கிடப்பது தொடர்ந்து வருகிறது. மணப்பாறையை அடுத்த கீழப்பொய்கைபட்டி கடலை தோட்டத்தில் (15.02.2021) நேற்று 22 மயில்கள் நகர முடியாமல் கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து, தகவலறிந்து வந்த வனதுறையினர் சோதனையில் 6 ஆண் மயில்கள், மற்றும் 12 பெண் மயில்களின் சடலங்களை மீட்டனர். மேலும், விளைநிலத்தில் முயலை பிடிப்பதற்காக கண்ணி வலை வைக்கப்பட்டது தெரியவந்தது. மயில் கண்ணியில் சிக்கி உயிரிழந்தா? அல்லது விஷம் கொடுத்து கொல்லப்பட்டதா? என நில உரிமையாளரிடம் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
