புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரியில் தொழிலாளர் வருங்கால வைப்புநிதி கருத்தரங்கம்

0
full

புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரியில் தொழிலாளர் வருங்கால வைப்புநிதி கருத்தரங்கம்

திருச்சி மாவட்டம், துறையூர் வட்டம், புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரி வணிகவியல் துறையின் சார்பாக “தொழிலாளர் வருங்கால வைப்புநிதி” என்ற தலைப்பில் கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. முதலாவதாக வணிகவியல் துறை இயக்குநர் முனைவர் இரா. மதிவாணன் அவர்கள் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.

poster

இந்நிகழ்ச்சியினைக் கல்லூரி முதல்வர், முனைவர் அ.ரா. பொன்பெரியசாமி அவர்கள் தலைமைத்தாங்கி உரையாற்றியபோது, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் வருங்கால ஓய்வுநிதி நிறுவனம் சிறப்பாக செயல்படுவதுடன் பல்வேறு வேலைவாய்ப்புகளையும் உருவாக்குவதாகக் கூறினார்.

ukr

இக்கல்லூரியின் தலைவர் பொன். பாலசுப்ரமணியன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். அப்போது, வேலையின்மை, முதியோர் உதவித்தொகை, வேலைசெய்யும் உரிமை, கல்வி மற்றும் பொது உதவிகளைப் பெறுவதற்கு அரசு அதன் பொருளாதாரத் திறனின் எல்லைக்குள் பயனுள்ள ஏற்பாடுகளைச் செய்யும் என்று அவர் உரையாற்றினார்.

கல்லூரியின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் எம். மீனாட்சிசுந்தரம் தனது வாழ்த்துரையை வழங்கினார். திருச்;சிராப்பள்ளி, தொழிலாளர் வருங்கால வைப்புநிதி நிறுவன அமலாக்க அதிகாரி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசினார். அப்போது, ஒருவர் 58 வயது ஓய்வூதிய வயதை எட்டாமல் ஒரு ஊழியர் வருங்கால வைப்புநிதியை (இ.பி.எஃப்) பெறுவதற்கான வழிமுறைகளை எடுத்துரைத்தார். மேலும், இ.பி.எஃப் எந்த வகையான நிறுவனங்களுக்குப் பொருந்தும் என தெளிவாகக் குறிப்பிட்டதுடன் பணியாளரின் இருப்புத் தொகையை இ. சேவை மூலம் எவ்வாறு தெரிந்துகொள்வது என்பதையும் குறிப்பிட்டார். மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு தங்களது கருத்துக்களை சிறப்பு விருந்தினருடன் பரிமாறிக்கொண்டனர். இறுதியாக வணிகவியல் துறைப் பேராசிரியை ஜனத்துல் பிரதோஸ் நன்றி கூறினார்.

half 1

Leave A Reply

Your email address will not be published.