திருவெறும்பூர் அருகே வணிகர் சங்கங்கள் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்

0

திருவெறும்பூர் அருகே வணிகர் சங்கங்கள் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்

 திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூரில் கடை வீதியில் சர்வீஸ் சாலையை எதிர்த்து பறக்கும் பாலம் சாலை வேண்டி வணிகர் சங்கங்கள் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம் நடத்தினர். இதுபற்றிய விபரம் வருமாறு திருச்சியிலிருந்து திருவெறும்பூர் வழியே தஞ்சை செல்லும் நான்கு வழி தேசிய நெடுஞ்சாலை மிகவும் நெரிசல் மிகுந்த சாலை ஆகும். இதில் பல்வேறு விபத்துகள் தொடர்ந்து நடந்து வந்தன. இதில் நூற்றுக் கணக்கானவர்கள் இறந்துவிட்டனர். இதனையடுத்து திருச்சி பழைய பால் பண்ணையில் இருந்து துவாக்குடி வரை 14.5 கிலோ மீட்டருக்கு சர்வீஸ் சாலை வேண்டி அப்பகுதி மக்கள் சர்வீஸ் சாலை கூட்டமைப்பு அமைத்து தொடர்ந்து 10 வருடங்களாக போராடி வருகின்றனர் இதற்கான பணியை அரசு தொடங்கிய பொழுது இது சம்பந்தமாக மதுரை ஐகோர்ட்டில் பலர் வழக்கு தாக்கல் செய்துவிட்டனர்.

சந்தா 2

தற்பொழுது வழக்கு முடிந்த நிலையில் சர்வீஸ் சாலை பணியை அரசு தொடங்கிவிட்டது. இந்நிலையில் அப்பகுதியில் பாதிக்கப்படும் கடைக்காரர்கள் வணிகர்கள் ஒருங்கிணைந்து சர்வீஸ் சாலை அமைக்கும் அரசு திட்டத்தை உடனே கைவிட வேண்டும் என்று தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றனர். கடந்தவாரம் இது குறித்து திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். இன்று காட்டூர் கடைவீதியில் கருப்பு கொடி ஏந்தி போராட்டம் செய்தனர். போராட்டத்திற்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜிலு தலைமை வகித்தார். வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் மாரப்பன் ரகுநாதன் டாக்டர் பிரேம் ஆனந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

‌சந்தா 1

போராட்டத்தில் கருப்புக்கொடி ஏற்றி மாநில பொதுச்செயலாளர் கோவிந்தராஜுலு பேசுகையில் திருச்சி தஞ்சை சாலை பழைய பால்பண்ணை முதல் துவாக்குடி வரை 14.5 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை விரிவாக்கப் பணிகளுக்காக கடைகள் வணிக நிறுவனங்கள் குடியிருப்புகள் தொழிற்கூடங்கள் கல்வி நிறுவனங்கள் மருத்துவமனைகள் வழிபாட்டுத்தலங்கள் உள்ளிட்டவற்றை இடித்து அப்புறப்படுத்த அரசு எடுக்கும் முயற்சிகளை வன்மையாக கண்டிக்கிறோம். சாலை விரிவாக்கம் செய்வதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை உடனடியாக அரசு நிறுத்த வலியுறுத்துகிறோம். பழைய பால்பண்ணை முதல் துவாக்குடி வரை நிரந்தர தீர்வாக உயர்மட்ட பறக்கும் பாலம் அமைக்க வேண்டுகிறோம். துவாக்குடி அசூர் முதல் ஜீயபுரம் வரையிலான அரைவட்ட சுற்றுச்சாலை ரிங்ரோடு திட்டம் 75 சதவீதம் முடிவடைந்த நிலையில் அதை உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டுகிறோம்.

வணிகர்களின் வாழ்வாதாரத்தை அரசு பாதுகாக்க வேண்டும் எங்களது கோரிக்கையை அரசு ஏற்காவிட்டால் வருகின்ற 23 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மாபெரும் கடையடைப்பு மற்றும் உண்ணாவிரத போராட்டம் நடத்துவோம் என்றும் சர்வீஸ் சாலை பணிக்கு எங்களுக்கு எதிராக செயல்படும் அரசியல் கட்சியினர் அரசியல்வாதிகளுக்கு நாங்கள் வரும் தேர்தலில் தக்க பாடம் புகட்டுவோம் என்று எச்சரிக்கை விடுத்தார்.போராட்டத்தில் பழைய பால்பண்ணை முதல் துவாக்குடி வரை இருமருங்கிலும் உள்ள கடைக்காரர்கள் பில்டிங் உரிமையாளர்கள் துவாக்குடி வியாபாரி சங்க தலைவர் சேகர் பொதுச்செயலாளர் ஜெயினுதீன் ஆலிம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் போராட்டத்தை ஒட்டி பழைய பால்பண்ணை முதல் துவாக்குடி வரை சாலையிலுள்ள இருமருங்கிலும் உள்ள கடைகள் வியாபார ஸ்தலங்களில் கருப்புக்கொடி கட்டப்பட்டிருந்தது. போராட்டத்திற்கான ஏற்பாடுகளை ரவி சங்கர் செந்தில் பாலு சம்சுதீன் ஆகியோர் செய்திருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.