திருச்சியில் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 319 மனுக்கள்:

0
1 full

திருச்சியில் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 319 மனுக்கள்:

குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, ஆக்கிரமிப்பு அகற்றக்கோரியது,
பட்டா மாறுதல், சாதிச்சான்றுகள், இதர சான்றுகள் மற்றும் நிலம் தொடர்பான 106 மனுக்களும்,
குடும்ப அட்டை தொடர்பான 25 மனுவும், முதியோர் உதவித்தொகை, விபத்து நிவாரணத் தொகை, மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நலத்திட்ட உதவிகள் மற்றும் விதவை உதவித்தொகை கோரி 56 மனுக்களும், ரோடு,தெருவிளக்கு, தண்ணீர் இணைப்புகுழாய், பஸ் வசதி,தொகுப்பு வீடு மற்றும் இதர அடிப்படை வசதிகள் கோரி 15 மனுக்களும், புகார் தொடர்பான 09 மனுக்களும், திருமண உதவித்தொகை, இலவச தையல் இயந்திரம், இரண்டு பெண் குழந்தைகள் திட்டம்,  சலவைப்பெட்டி, தொடர்பாக 27 மனுக்களும், பென்சன், நிலுவை தொகை கேட்டல் மற்றும் ஓய்வூதிய பயன்கள் மற்றும் தொழிலாளர் நல வாரியம் தொடர்பான மனுக்கள் தொடர்பாக 06 மனுவும்,  என மொத்தம் 244 மனுக்களும், இதர மனுக்கள் 75 என மொத்தம் 319 மனுக்கள் பெறப்பட்டது.

இம்மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சம்மந்தப்பட்ட துறை
அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்கள். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் த.பழனிகுமார்,மாவட்ட சமூக நல அலுவலர்
தமீம்முனிசா மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் இரவிச்சந்திரன், மற்றும்
அனைத்துத் துறை அரசு அலுவலர்கள், பொதுமக்களும் பங்கேற்றனர்.

3 half

Leave A Reply

Your email address will not be published.